உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131 தென் இந்தியாமீது இந்தியைத் திணிப்பது சர்க்கார் நோக்கமல்ல என்று குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், ஹைதராபாத்தில், ஜூலையில்தான் பேசியிருக் கிறார். நேரு பண்டிதர்,பல தடவைகளில் இந்தி வெறியர்களின் போக்கைக் கண்டித்திருக்கிறார். எந்த மொழியும் சொந்த மொழிக்கு பலமுறை பண்டிதர் பேசி இருக்கிறார். வடநாட்டிலேயே, பல தலைவர்கள் யம் கலிங்கம் - பாஞ்சாலம்-ஆகிய வெறியைக் கண்டித்துப் பேசினர். ஈடாகாது என்று வங்கம் - மராட்டி பகுதியினர், இந்தி மொழி அல்லது கல்வி சம்பந்தமான விழாக்கள் நடை பெறும்போதெல்லாம், இந்தி திணிக்கப்படமாட்டாது என்று பேசுகிறார்கள்; டில்லி தர்பாரினரே இனியும் பேசப் போகிறார்கள். தாலமுத்து நடராசன் உயிர் குடித்ததோடு, தமிழ கத்தைப் பொறுத்தவரையில், கட்டாய இந்தி மடிந்தது என்று திட்டவட்டமாகக் கொள்ளலாம். மத்ய சர்க்காரின் நிலையைப் பல தடவைகளில் இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்திவிட்டனர்- ராஜ்ய சர்க்கா ருக்கு யுக்தம்போல்' நடந்துகொள்ளும் உரிமை தரப்பட்டிருக் கிறது. எனவேதான், ஆந்திரத்தில், ராஜ்ய சர்க்கார் இந்தியைக் கட்டாய பாடமாக்கிவிட முடிந்தது; சென்னை இராஜ்யத் தில், இந்தி கட்டாய பாடம் ஏன் ஆக்கவில்லை என்று ஆந் திராவைச் சுட்டிக்காட்டி, மத்ய சர்க்கார் கேட்கவில்லை. கட்டாய இந்தி' மத்ய சர்க்காரின் திட்டமாகவும் இன்று இல்லை; சென்னை ராஜ்யமும் அதைத் திட்டமாகக் கொள்ளவில்லை - அது போன்ற நோக்கமோ முயற்சியோ இல்லை. இந்த நிலையில், இந்தியைக் கட்டாய பாடமாக்குவ தில்லை, திணிப்பதில்லை என்று வாக்குறுதி ஏன் நமக்கு? எனவே, இப்போது கொடி கொளுத்துவதாகக் கூறி ஓர் போர்ச் சூழ்நிலையை உருவாக்கி, அதனைக் காட்டி, காமராஜர் அறிக்கை என்ற 'வரம்' பெற்றதாகக் கருதிப் பூரிப்படைய நமக்கு மனம் இடந்தரவில்லை-அது பெரியாருக்குப் பெருமை தருவது என்று கூறி, அவருடைய பெருமையைக் குறைத் திடவும் விருப்பம் எழவில்லை-அந்தக் காரியத்தை அவரு டைய இன்றைய நண்பர்கள், ஒத்துழைப்பாளர்கள், திறம் படச் செய்துவருகிறார்கள் - அந்தச் சிரமத்துக்காகப் பணமும் பெறுகிறார்கள்!!