உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

155 பாடும் கண்கள்! தேடும் இதழ்! என்றெல்லாம் பரவசப் பட்டுக் கூறி, கெண்டை அழகும் கொண்டை அழகும், இடையின் நெளிவும் தொடையின் தரமும், அங்கம் ஒவ்வொன்றிலும் பருவ கருவம் பதிந்து கிடக்கும் பான்மையும் இருத்தலைக் கண்டு. துஷ்யந்தன் மனமகிழ்ச்சி கொண்டு, மானும், அன்ன மும் மிரண்டோட, மலர்கசங்ககனிசிதற,கன்னியர் வெட்கத் தால் கண் பொத்திக் கொண்டு வேறுதிக்கு நோக்கி ஓடிட, துடியிடையாளைத் தொட்டிழுத்து முத்தமிட்டுப் பட்டத்தரசி யாக்குவேன்! கட்டிக்கரும்பே! என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்! என்று கனிமொழி பேசி, கன்னியின் புதுப்பார்வை யால் துளைக்கப்பட்ட கட்டுடலின்மீது பட்ட காமன் கணைகள் பொடிபட இன்பம் பெற்று இகத்தில் இதோ பரம் கண்டேன் என்று பூரித்துக் கூறிச் சகுந்தலையை வாரி அணைத்துக் கொண்ட இடம், கண்வரின் ஆஸ்ரமம் அல்லவோ!! அத்திரி யும் பிறரும், தவசிகளில் குறிப்பிடத்தக்க எவர் பற்றியும் கூறப்பட்டுள்ள புண்யகாதைகளில் இந்தப் ‘புனிதம்' ததும் பிடக் காண்கிறோம். தவசிகள் இருந்தநிலை, பலஆண்டுக் காலம் பகலென்றும் இரவென்றும் பாராமல், ஊணும் உறக்க மும்கூட மறந்து தொழில் நடத்திப் பெரும் பொருள் ஈட்டி, இனித் தம்மிடம்குவிந்துள்ள செல்வம்,சிதையாது குறையாது என்ற நிலை பிறந்ததும், பாரிசு சென்று, என்னைப் பார் என் அழகைப்பார் கண்ணாலே! என்று இதழால் கூறிடும் இன்ப வல்லிகளுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடும் கனவான் போன்று பெரிதும் இருப்பதைக் காணலாம். ஆரியத் தவசி கள், ஆசாபாசங்களை விட்டொழித்தவர்களாகவோ, காமக் குரோதாதிகளைச் சுட்டெரித்தவர்களாகவோ, பற்று அற்றவர் களாகவோ காட்டப்பட்டு இல்லை! மாபெரும் போர் பல புரிந்த பிறகு மன்னர்கள் பெறக்கூடிய மதுநிகர் இன்பத்தை இந்தத் தவசிகள், மகேசனுக்கு எம்மிடம் மட்டற்ற அக்கறை உண்டு என்று கூறுவதாலேயே பெற்றனர்! அவர்களுக்கு குலச் சண்டை, குடும்பச்சண்டை, குமரிகளால் மூண்டிடும் குத்து வெட்டு, யாருக்கு யார் சீடர் என்பது பற்றிக் கிளம்பிடும் சச்சரவு சமர், யாருடைய அந்தஸ்து பெரியது என்பதுபற்றிய அமளி, எல்லாம் உண்டு!! காட்டு ராஜாக்கள் என்று கூறி, அது எத்தகையது என்பதுபற்றி எண்ணிப்பார்த்துத்தெரிந்து கொள்க என்று கூறிடத் தோன்றுகிறது, தம்பி, அவ்வளவு கோலாகலமாக இருந்து வந்தனர் ஆரியத்தவசிகள்! ஆரியத் தவசிகள் துறவிகளல்ல மிகமிகக் கர்விகள் என்பதைத்தான் அவர் பற்றிய சிலபல கதைகள் காட்டுகின்றன! இன்று தமிழகத்தில் உள்ளதுறவிகள்,இளங்கோ காட்டிய வழியில் செல்கின்றாரில்லை, செல்லும் திறனும் இருப்பதாகத்