உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

168 திருப்தியும் நிலைத்து நிற்கவில்லை, மீண்டும், அந்த நீண்ட காலச் சிக்கல்தான் தலைதூக்கிற்று. எல்லாம் சரி, ஏன் சர்வேஸ்வரன் தன் சிருஷ்டியான கேவலம் மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுகிற முறையில் நடந்து கொள்ளவேண்டும், விநாடிப் போதில் அவர் விரும்பினால், சாதிக்கக்கூடிய காரியங்களை, ஏன் ஆண்டவன், சுற்றிவளைத்து நிறைவேற்றப் பார்க்கிறார்? துவக்கத்திலேயே, எதையும் குற்றமற்ற முறையிலே படைத் திருக்கலாமே.ஏன் ஆண்டவன் சிருஷ்டியிலே ஆயிரத்தெட்டு அலங்கோலங்கள், மனிதனை இரத்த வெறி கொண்டலையும் நியிலைல் படைத்திடுவானேன், பிறகு அந்த வெறியை ஒழித்து அவனைச் சன்மார்க்கத்தில் செல்லச் செய்வதற்கு பல்வேறு வழிவகைகளை அருளுவானேன் - அந்தனியின் உள்ளத்திலே, எழும்பிய இந்த அலை அடங்க மறுத்தது. லாண்டிரிப் சொன்ன கடவுட் தத்துவம் அந்தனியின் உள்ளத்தைத் தொட்டது. சர்வ வல்லமை உள்ள ஆண்டவன்,மனிதனிடம் எதைத் தான் எதிர்பார்க்கவேண்டும், ஏன் எதிர்பார்க்க வேண்டும். மண்பாண்டம் செய்பவனுக்கு எவ்வகையில் நன்றி கூறுவது என்று களிமண் எண்ணுவது போலல்லவா இருக்கும், சர்வேஸ் வரனுக்கு நன்றி கூறவேண்டும் என்று மனிதன் எண்ணினால்! ஆண்டவனைத் தொழுவது, தோத்தரிப்பது, மண்டியிடு வது.இவைகளால் அவருக்கு என்ன பயன்? நமது வாழ்த்துத லும் வணக்கமும் அவருக்கு எற்றுக்கு? எது எது எப்படிஎப்படி நடைபெறவேண்டும் என்பதனைத்தையும் அவர் எப்போதோ தீர்மானித்துத் தீட்டிவைத்திருக்கிறார் என்றால், ருடைய திரு அருளைத் தேடிப்பெறத் தொழுகை நடத்துகி றோம் என்று கூறிக் கொள்வதிலே பொருள் என்ன இருக் கிறது? அவ இத்தகைய கடவுட் கோட்பாட்டைவிட,லாண்டிரிப் கூறு வது, பொருத்தமுடையதாகத் தெரிகிறது. மனிதனுக்காகப் பாடுபடும் மாவீரனாக, மனிதனை நேசிக் கும் தோழனாக, மனிதனை மாண்புள்ளவனாக்கும் மகத்தான சேவை செய்யும் நண்பனாகக் கடவுளைக் கொள்வது, சாலச் சிறப்புடையதாகத் தெரிகிறது. அத்தகைய ஈசனை அறிய முடிந்தால்?இன்பம்தான். 0 0 0 இங்ஙனம் ஒவ்வொரு சம்பவத்தின்போதும்,அந்த அடிப் படைக் கேள் விதான் கிளம்பிற்று.ஏன் ஐயனுடைய சிருஷ்டி யிலே இவ்வளவு அலங்கோலம்? ஏன் கொடுமைக் குணங் களைப் பிறந்திடச் செய்கிறார்? பிறகு மனிதனைக் கொடுமை