உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

173 "வயலூரிலிருந்து நெல் வண்டிகள் வந்து விட்டனவா? கோட்டையூரார் குத்தகைப் பணத்தைக் குறைவின்றிக் கொடுத்துவிட்டாரா? பட்டணப் பிரவேசத்துக்கு இந்த ஆண்டு, செலவு எவ் வளவு என்று புள்ளி போட்டாகி விட்டதா? வாழைத் தோட்டத்திலே புதிய வாயிற்படி வைத்தாகி விட்டதா? களா? முல்லைத் தோட்டத்திலே ஊஞ்சல் அமைத்துவிட்டார் சென்னை வழக்கு எந்தக் கட்டத்தில் இருக்கிறது? கல்கத்தாவிலிருந்து மருந்து பார்சல் இன்று வந்து விட்டதா? கனகாம்பரக் கலர் ஆடை வாங்கியாகிவிட்டதா? கைவளைகள் எங்கே? தோடு மேலும் இரண்டு ஜூதை வேண்டும்! தொங்கட்டம், பார்வையாக இல்லை! தில்லைத் தாதன் வந்ததும் எனக்குச் சொல்லு. கொல்லைப்புறக் கதவைத் தாளிட்டுவிட வேண்டாம். பல்லைக்காட்டி நிற்கும் பாக்கியத்துக்கு, பத்து கொடுத் துத் துரத்து. ஏன், உரத்த குரலில் கத்திக் கத்தி என் உறக்கத்தைக் கெடுக்கிறார்கள், நால்வரின் பாடல்களை மனதுக்குள் படித் திடச் சொல்லு35 இன்றையத் துறவிகள் இங்ஙனம் பேசி இருந்திடக் காண் கிறோம். கதை மூலம், உண்மைத் துறவி எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பது குறித்து, ஒரு ஆங்கில ஆசிரியர் காட்டு கிறார். வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா- என்றுதான் தம்பி உன்னைக் கேட்கிறேன். நமது இயக்கத்தால் நாட்டிலே நாத் தீகம் தலைவிரித்தாடுகிறது என்று நாப்பறை கொட்டும் நல்ல வர்களைக் கேள் தம்பி,துறவியின் இலட்சணம் என்ன என்று. காதிலே குண்டலம், கழுத்திலே தாவடம், சேவடியில் பாதுகை, உடலில் காவி, என்று கூறுவர். சரி ஐயன்மீர்; கோலம் கிடக்கட்டும், உள்ளம்எப்படி இருக்கவேண்டும் என்று கேள். உடைமைகள், அவை பற்றிய உரிமைகள், இவை பற்றிய எண்ணம் கொண்டிருப்பது, துறவு ஆகுமா? என்று கேள். இன்றைய ஆதினங்கள் அந்தனிபோன்ற துறவுகொண்டு தூய்மையான தொண்டாற்ற முன்வருவாரா என்று கேள்.