உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

174 சிவனருளால், எமது காலம் வரையில், இந்தச் சுகபோ கம் நிலைத்து இருந்தால்போதும் என்று எண்ணுவோரும், விடை ஏறும் பெருமானுடைய அருளால், வழக்கும் வல்லடி யும் தாக்காதிருந்தால்போதும் என்று எண்ணுவோரும் துறவி களாகத் 'தர்பார்' நடத்த அல்லவா காண்கிறோம். தம்பி, நான் ஏட்டிலே சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். உனக்கும் அப்படித்தான் தோன்றும். தேடினால் கிடைப்பார்களா என்று எண்ணுவதைவிட, தம்பி, நாம் அப்படிப்பட்ட 'துறவிகளாகிவிட வேண்டும். குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது.துணைவி இருப் பாள், நமது தொண்டுக்குத் துணைபுரிய. குழந்தைகள் இருக் கும், அன்புக்கான அரிச்சுவடியைஉணர்த்த.தொழிலில் ஈடுபடு வோம். வாழ்க்கை நடத்த. ஆனால் உடமைகளுக்குக் கட்டுப் பட்டுவிடாமல், தன்னலத்துக்கு ஆட்பட்டுவிடாமல், சுக போகத்திலே ஆழ்ந்துவிடாமல், வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா, என்று கேட்கும் ஆற்றலையும், அத் கைய கேட்டினைக் களைந்திட அறப்போர் நடாத்தும் திறத் தினையும் பெற்று,மடம் தேடாமல், தாவடம் அணிந்த சடம் ஆகாமல், காவி தேடாமல், அதனுள் மறைந்திடும் காமி ஆகாமல், தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத் திலே இடம் பிடிக்க அல்ல. நமது இதயத்திலே அன்புக்கு, இட மளித்து, அறநெறியை நாட்டிலே புகுத்தி, மக்களைப் புதிய தோர் இன்பம் பெறச் செய்யும் புனிதத் தொண்டாற்றும் துறவியாக வேண்டும். நாட்டிலே இத்தகைய துறவிகளே இன்று அவசர அவசரமாகத் தேவை. ஏழையின் அழுகுரலை, எளியோரின் கண்ணீரை, பதிகம் பாடியும் மணி அடித்தும் போக்கிட முடியாது, தம்பி! முடியாது. துறவிகள் வேண்டும். புதிய துறவிகள். வெள்ளை உடை போதும், காவி தேடி அலைய வேண்டாம். காவிகளைத்தான் பார்க்கிறோமே! அளக நிரை குலைய விழி குவிய வளை கல கலென அமுத மொழி பதறி யெழ அணியாரம் அழகொழுகு புளகமுலை குழைய இடை துவளமிக அமுத நிலை அதுபரவ அதி மோகம் உள முருக வரு கலவி தரு மகளிர் கொடுமையெனு முறுகபட மதனில் மதி அழியாதே என்று உலகுக்கு உருக்கமாக உபதேசம் செய்துகொண் டிருக்கிறார்கள்! உபதேசம்! நாம், தொண்டாற்றும் துறவிகளாக வேண்டும்.