உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184 இந்தியப் பேரரசு, இந்தி தேசீய மொழி; என்பவைகளை மறுப்பது ஆபத்தாக முடியும் என்று அஞ்சிக் கிடப்பதும், 'ழ' கரத்தையும் 'ற'கரத்தையும் காத்திட நம்மாலான முயற்சி செய்வோம் என்று முனைவதும், பலனளிக்காது. வேரிலே கொதி நீர் ஊற்றும் காதகர்கள் இருக்கும்போது, இதழின் அழகு பற்றிப் பேசி மகிழ்வது பலன் தராது! ' மட்டு மல்ல, தமிழ் மொழிக்கு. தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழகத் துக்கு ஆபத்து என்பதை அஞ்சாது எடுத்துரைக்க முன் வருதல் வேண்டும். தம்பி! பேராசிரியர்கள். 'ழ'கர 'ற கரத்தோடு நின்று விட்டாலும், நீயும் நானும்,நம் போன்ற சாமான்யர்களும், கடல்நீர் கரிக்கிறது - பணிக்கர் பேச்சு புளிக்கிறது-டில்லி கொட்டுகிறது என்ற உண்மைகளை எடுத்துரைப்போம். பேராசிரியர்களின் பெரும்புலமை நாட்டுக்குப் பலனளிக்கத் தவறிவிட்டாலும், நாம் நமது தூயதொண்டு மூலம், நாட்டு விடுதலைக்கான ‘சூழ்நிலை'யை உருவாக்க வல்லோம்-அதிலே எனக்குள்ள உறுதி, நான் நாட்டு மக்களின் நல்லார்வத்தைக் காணுந்தோறும் காணுந்தோறும், வளர்கிறது, மிளிர்கிறது!! அன்புள்ள, 11-9-1955. கடிதம்: 19. "எங்கள் நாடு' காகிதத் தொழிலில் வடநாட்டு முதலாளிகள் - திராவிடநாடு விடுதலையின் தம்பி, உபகண்ட வாழ்க்கை நிலை "எங்கள் நாடு! இது எங்கள் நாடு! எங்கும் புகழ் தங்கும் நாடு வளம் பொங்கும் நாடு வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாத்த தாடு!! அவசியம் -- இந்திய கவர்னர், சேலம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இந்தப் பாட்டுக் கேட்டாராம்! பள்ளிச் சிறுமிகள் இந்தப் பாட்டுப்