உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

203 குவதை, புலிக்கு அஞ்சிப் புள்ளிமான்கள் சிட்டாகிப் பறப் பதை, காட்டெருமைக் கூட்டம் பெருமரங்களைச் சாய்ப்பதை. வர்ணஜாலமிக்க விந்தைப் பறவைகள் விதவிதமான ஒலி கிளப்பி மகிழ்வதை, இந்த (ஆரண்ய" அழகினைக் கண்டு அக மகிழ்ந்திருந்தார்! திருவிதாங்கூர் மன்னரின் பிரத்யேக விருந்தினர்! கேரள நாடு! மன்னரின் விருந்தினர்! குன்றின்மீது மாளிகை! ! இன்பத்தேன் பாயாதிருக்குமோ!! இதைக் காண வந்த நேருவை, ஐயோ! அப்பா! அம்மா! ஐயகோ! என்று தஞ்சை அழைத்தால், வருவாரா? வரவில்லை! புயல் தஞ்சைப் பூங்காவை அழித்த போது ஏற்பட்ட வேதனையை விட அதிகமாகத்தான் வேதனை, நேரு பண்டிதர் அந்தச் சமயத்தில் 'ஆரண்யரசம்' பருகிய சேதி கேட்டவர்களுக்கு! வெள்ளைக்காரன், இதுபோலச் செய்யத் துணியவில்லை. செய்தி ருந்தால்,ஆயிரம் ஆயிரம் மேடைகள் அதிர்ந்துவிடும்! நேரு செய்தார் - ரோமாபுரி தீப்பிடித்து எரியும்போது நீரோ மன் னன் யாழ் வாசித்து மகிழ்ந்தான் என்பார்களே, அது போல! அண்ணனுக்கு நானென்ன மட்டமா! என்று கேட்பது போல, விஜயலட்சுமி அம்மையாரும், அவர் குடும்ப அலங் காரவதிகளுடன், சீர்கெட்டுப் பேர் கெட்டு, ஊர்விட்டு ஊர் ஓடி சிரமப்பட்டுச் சிதையும் தமிழர்களை, பிடரியில் கால் வைத்து உதைத்துத் தள்ளிடும் போக்கில், கொத்தலாவலை சர்க்கார் நடந்து கொண்ட நேரமாகப் பார்த்து, விருந்து வைபவத்தில் கொண்டாட்டமாகக் கலந்துகொண்டார்; குமரிகளோ, கடையும் இடையும், நடையும் உடையும், மேனாட்டு மங்கையரை வெட்கிடச் செய்கிறது பார் என்று கூறுவதுபோல, கோலம் காட்டி, ஆங்கிலமுறை நடனமாடி, அகமகிழ்ந்தனர்! ! வெளிப்படையாக, வெட்கமின்றி, யார் கேட்கமுடியும் என்ற துணிவுடன்தான்,வடநாட்டு வன்கணார்கள், தர்பார்' நடத்துகிறார்கள்! வாயடைத்தும், கைகட்டியும் நிற்பதுதான் தேசீயம் என்று கருதப்படுகிறது-ஆகுமா இத்தகைய அக்ர மம் என்று கேட்கத் துணிபவரையோ, தங்கள் கோபப் பார் வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடலாம் என்று எண்ணு கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்! கோட்டைமீது ஏறி, கவர்னரும் முதல் மந்திரியும் புடை சூழ அமர்ந்து, நேரு பண்டிதர் பேசப் போகிறார். என்ன பேசுவார்! பஞ்சசீலம், பாரதத்தின் புகழ் பாரெ லாம் பரவிடும் பெருமை, உழைப்பின் மேன்மை, கோவாக் கொடுமை, கொரியாவில் நமது கடமை, ஆப்பிரிக்க சர்க்