உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

கொதித்தெழுந்து இல்லை! 222 பொதுமக்கள் கேட்டனரா, என்றால் பார்ப்பனர்கள் சிலர் - அதிலும், சர்.சி.பி. இராமசாமி ஐயர், இராமசாமி சாஸ்திரிகள், இராஜகோபாலாச்சாரியார், அனந்தராமகிருஷ்ண ஐயர், டி. டி.. கிருஷ்ணமாச்சாரி, வி.டி. இரங்கசாமி ஐயங்கார் போன்ற பிரபலஸ்தர்கள்கூட அல்ல; சிலர் கூடினர், சீறிப்பேசினர், திருச்சியில் நகர்ச்சதுக்கத்தில் 'இந்து' ஒரு குட்டித் தலையங்கம் தீட்டிற்று. அவ்வளவுதான்! சர்க்கார், சத்தம் வரும் திக்கு நோக்கிச் சரணம்! சரணம்!! என்று கூவுகிறது!! துக்க தினம் கொண்டாடுவோம் -- இந்த போஸ்டர் எமது மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது-உடனே வாபஸ் பெறுக - என்று 'செத்த பாம்புகள் கூறின. உடனே, சகல கட்சிகளையும் அணைத்துக்கொள்ளும் சரசாங்கிச் சர்க்கார், அடியற்ற நெடும்பனையாகிறது! நாதி இல்லை! பார்த்தாயா தம்பி, நாதி, யாருக்கு இல்லை என்பதை?! 30.125 போஸ்டர்கள் அச்சிட்டனர், 5000 ரூபாய் செலவிட்டனர். ஆரியர் ஒரு சிறு கண்டனம் கிளப்பினர், அவ்வளவுதான். சர்க்கார், பாய் சுருட்டிக்கொண்டது! இந்த நிலைமைக்கு என்ன பெயர்? நாதி இல்லை என்பதா? பார்ப்பனரின் மனம் புண்படக் கூடாது என்று சர்க்கார் கருதுவதுகூட ஆச்சரியமல்ல, உமது மனம் புண்படும்படி அந்த போஸ்டர் இல்லையே என்று விளக்கம் கூறக்கூடச் சர்க்கார் அச்சப்படுகிறதே, அதுதான் உண்மையிலேயே ஆச்சரியம்! தீண்டாமை எனும் கொடுமை, ஆரிய மார்க்கத்தின் விளைவு-- ஆரிய மார்க்கத்தின் பாதுகாவலர் ஆரியர். ஆகவே தான் ஆரிய உருவம் பொறித்தோம்-இதை ஆட்சேபித்துப் பேசுவது அறிவற்ற செயலாகும். சர்க்கார் இத்தகைய அறி வற்ற செயலை மதிக்காது, தன் திட்டத்தை மாற்றிக்கொள் ளாது என்று எடுத்துரைக்கும் ஆண்மையாளர் அங்கே காணோம் - நடுவீதியில் போட்டும் அடித்தாலும் கேட்க நாதி இல்லை என்று பேசும் வீரம் இங்கே இருக்கிறது, ஏட்டில்/ அந்த ஏடு,ஆட்சிக்குக் கேடயம்' ஆகி மகிழ்கிறது! தம்பி! ஆரியர் கைகொட்டிச் சிரித்திட இதைவிட வேறு என்ன வேண்டும்? வைதீகர்கள் தீண்டாமையை ஆதரிக்கிறார்கள்; அவர் களுக்குச் சட்டத்தை நினைவுபடுத்தவே, இந்தப் போஸ்டர்.