உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

சுடிதம்: 23 தம்பி, அத்தர் வியாபாரம் லெனின் கிராடு முன்னும் பின்னும் - பல்கலைக்கழகத்தில் இராதாகிருட்டிணன் கருத்துரை - திராவிடர் இழிநிலை. லெனின்கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரி யர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினீர் - தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது-இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின்கிராட் -பெயரே இயல்பைக் கூறுவதாக இருக் கிறது--இலட்சியபுரி அது? கயிறு- மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும் பெரும்புரட்டன் ஆட்டிப்படைத்து வந்தான். தூணிலும் துரும்பிலும், கல்லறையிலும் கானாறு பாயும் காடுகளிலும், பிலங்களிலும்பிம்பங்களிலும், தேவனைக் கண்டனர் - கண் மூடிக்கிடந்தமக்கள்; காலடிவீழ்ந்து காணிக் கைக் கொட்டினர் மத குருமார்களுக்கு! கபட வேடதாரி களோ, கைகூடாக் காதலுக்கும் பிடிபடாக் கோட்டைக்கும், நவநிதிபெறுவதற்கும், நல்லவிளைவு கிடைப்பதற்கும் -- எதற் கும் பிரார்த்தனை - ஆசி தாயத்து - மந்திரக் கவசம் தருவர்- மக்கள் ஏமாற்றப்பட்டோம் எண்ணினதில்லை, எம்மான் அருளை இவர் மூலம் பெற்றோம் என் றெண்ணிப் பூரித்தனர். வறுமை வாட்டும், குளிர் கொட் டும், குழந்தைகள் (கோ' வெனக் கதறும், குமரிகள் உடலை விற்று உருமாறி உழல்வர்.-- கோயிலில் மணிகள் ஒலிக்கும், குருவின் பவனி கோலாகலமாக நடைபெறும், 'தர்மதாதா'க் கள் திருவிழா நடத்துவர்,ஆசி அளித்திடும் அருளாளர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில், ஏராளமான எடு பிடி களும் பொறுக்கி எடுக்கப்பட்ட பொற்கொடிகளும் புடைசூழ கொலு வீற்றிருப்பர்! என்று கயற்கண்ணழகி ஒருவளைக்கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்து, பெருமூச்செறிந்து, அந்தக் கட்டழகி! கன்னல் மொழியாள்!