உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

228 களும் அருளாலய அதிபர்களும் மட்டுமல்ல, சுட்ட சட்டியை ஏந்திப் பிழைத்திடுவோரும், காவிகட்டியதால் வயிறு நிரம் பிற்று என்று எண்ணுவோரும், மொட்டைத் தலையரும், காவடிச் சாமியாடிகளும் கூடக் களிநடனம் புரிவர்! டாக்டர் இராதாகிருஷ்ணனேகூட, பெருமிதத்துடன் தான் பேசுகிறார்-பரோடாவில் இந்தத் திங்கள் பத்தாம் நாள். லெனின் கிராடு பல்கலைக் கழகப் பேராசிரியர்களை யும், மாணவர்களையும், நான் என் வழிக்குக் கொண்டு வந்து விட்டேன். வாதாடினர் திறமையாக-என் எதிர் வாதம் கேட்டுத் திடுக்கிட்டனர்! கடாவினர்,நான்வீசிய பதில்களைக் கண்டு கவிழ்ந்தனர் அப்பப்பா! என்னென்ன கேள்விகள், எத்தனை குறுக்குக் கேள்விகள்! இவ்வள வுக்குப் பிறகு, அவர்கள் ஆம்! ஆம்! தாங்கள் கூறும் மதத்தை நாங்களும் விருமபுகிறோம் - ஏற்றுக் கொள்ள இசைகிருேம் என்று கூறினர் - என்கிறார். பாமர மக்காள்! பாமர மக்காள்? பண்டித ஜவஹர் ஏதேதோ நாடுகளில் பவனி வருகிறார், தலைவர்களைக் காணு கிறார், வெற்றி மாலை சூடுகிறார், என்றெல்லாம் பேசிக் கிடக் கிறீர்களே, நான் என்ன செய்திருக்கிறேன், எத்தகையவெற்றி பெற்றிருக்கிறேன்,எத்தகையவர்களை நம் வழிக்குத் திருப்பி இருக்கிறேன் என்பதை அறியாமற் கிடக்கிறீர்களே, கூறு கிறேன் கேண்மின்,லெனின் கிராடு நகரப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் மதத்தைஏற்றுக் கொள்ளச் செய்திருக்கிறேன் -- மகத்தான வெற்றி அல்லவா, அகிலம் புகழத் தக்க வெற்றியல்லவா இது! லெனின்கிராடில் மதத்துக்கு இடம கிடைக்கும்படி செய்துவிட்டேன்! மதம் மக் களுக்கு அபின் என்று எங்கு பேசப்பட்டதோ, அங்கு, மதம் தேவைதான்! எங்களுக்கும் மதம் வேண்டும்! என்று பேசச் செய்துவிட்டேன், இந்த மகத்தான வெற்றி பெற்றதும், சாமான்யமான முயற்சியால் அல்ல, மெத்தச் சிரமப்பட்டு, விளக்கமளித்து, தர்க்கம் நடத்தி, கேள்விக் கணைகளைத் தூளாக்கி, சந்தேகத்தைத் துடைத்து, பிறகு வெற்றி பெற் றேன்!- என்ற கருத்துப்பட டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தம்பி, என்ன சொன்னதால், இந்த 'வெற்றி' கிடைத்தது தெரியுமா? அதைத் தெரிந்துகொள்ள, ஒரு சிறுகதை, கூறுகிறேன் கேள். யாருக்கும் அடங்காத, எவரையும் எதிர்க்கும் முரடன் ஒருவன் இருந்தானாம் ஒரு ஊரில்! (ஊருக்கு ஒரு முரடன்