உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

அடிதம் 26 தம்பி, குன்றெல்லாம் கேட்கிறது! நாகநாட்டு விடுதலைக் குரல் - நிராவிட நாட்டுப் பிரீவினை. அமைச்சர் வருகிறார்! நேரு பண்டிதரிடம்கூட நெரித்த புருவத்துடன் பேசும் நிலைபெற்ற அமைச்சர் வருகிறார் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு யாரிடம் இருக் கிறதோ, அப்படிப்பட்ட அமைச்சர் வருகிறார். உள் நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு என்றால், சாமான்ய மானதா! இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் விதித்திடும் ஆற்றல் இந்த அமைச்சரிடம் இருக்கிறது என்பது பொருள்? "ஜாலியன்வாலா' நடக்கட்டும் என்று அவர் உத்தரவிட் டால் போதும், நூற்றுக்கணக்கான ‘டயர்கள்' ஓடோடிவந்து தமது திறமையினைக் காட்டி, பட்டமும் பதக்கமும் பெற்று அவருக்குப் பணிவிடை புரியக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பொருள்! வீடுகளைத் தரைமட்டமாக்குங்கள்! விம்மிடுவோருக்கு விலங்கிடுங்கள்! வீரம் பேசுவோரின் விலாவை நொறுக் குங்கள்! கண்டனக் குரல் கிளம்பினால், காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல், துரத்தித் தாக்குங்கள் என்றெல் லாம் கட்டளைகள் பிறப்பிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறவர் என்று பொருள்! இந்தியத் துணைக்கண்ட முழுவதும் உள்ள 'போலீஸ் படைகள்' அவர் சுட்டுவிரல் காட்டும் திக்குநோக்கித் தாவும்! அது போதாதென்று அவர் கருதினால், பட்டாளத்தையும் வரவழைக்க முடியும். கடும் தண்டனை! கடும் தண்டனை! காலை மாலை கன்றுக்குட்டிக்குப் பாலை ஊட்டாதே! இந்தக் காவலன் இட்ட தடையை மீறி வாலை ஆட்டாதே! ஆட்டினால், கடுந்தண்டனை! என்ற உடுமலைக் கவியின் பாடலைச் சொர்க்க வாசலில் கேட்ட துண்டல்லவா - அதுபோன்ற தடை உத்தரவுகள் போடவும், கடுந் தண்டனைகளை விதிக்கவும் 'உரிமை' பெற்றவர் என்பது பொருள்! அ.க. 16