உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குழந்தைச் செல்வம்


பொங்கு திரைகளோ?கடலே! - அவை
      புரவி நிரைதாமோ? கடலே!
எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி
      இடியின் முழக்கமோ? கடலே! 3

ஓடம் எடுத்தெறியும் கடலே! - தயை
      உனக்குச் சற்றிலையோ? கடலே !
ஆடல் வீடிதனைக் கடலே!- நீயும்
      அழிப்ப தழகாமோ? கடலே! 4

மலையை வயிற்றடக்கும் கடலே ! - எண்ணில்
      மகர மீனுலவும் கடலே!
விலைகொள் முத்தளிக்கும் கடலே! சிப்பி
     விளையா டற்குதவும் கடலே! 5

மழைக்கு மூலமும் நீ, கடலே ! - அதை
     வாங்கி வைப்பதும் நீ, கடலே !
வழுத்து மகிமையெலாம், கடலே!- எவர்
     மதித்து முடிக்கவலார்,கடலே! 6

21. சந்திரன்

மீனினம் ஓடிப் பரக்குதம்மா! - ஊடே
     வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா! - இந்த
     மாட்சியி லுள்ளம் முழுகுதம்மா! 1

முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? - தேவர்
     முத்து விதானம் அமைத்தனரோ?
வெல்லு மதியின் திருமணமோ?-அவன்
     விண்ணில் விழாவரும் வேளையிதோ? 2