உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1




                                               உதியஞ் சேரல் (நல்லினி)
                                                                          │
                         ┌────────────────────────────────────────┐
                         │                                                                                                       │           
    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்                        பல்யானைச்செல்கெழுகுட்டுவன்
  (குடவர்சேரமான் நெடுஞ்சேரலாதன்)                                           
     (குடக்கோ நெடுஞ்சேரலாதன்) 
     (ஆராத்திருவின் சேரலாதன்)
                                        │ 
   ┌──────────────────────────────────┐
   │                                   │                         │                       │
களங்காய்க்        கடல்பிறக்           ஆடுகோட்       (இளங்கோ
  கண்ணி              கோட்டிய            பாட்டுச்சேர       அடிகள்)       
நார்முடிச்சேரல்  செங்குட்டுவன்  லாதன்            
                                 
                    
  (தாய்                    (தாய்                       (தாய்              (தாய்
 வேளாவிக்           சோழன்               வேளாவிக்       சோழன்          
 கோமான்             மணக்                  கோமான்         மணக்
 பதுமன் தேவி)    கிள்ளி)                 தேவி)                கிள்ளி)
                                  


குட்டுவன் சேரல்


இந்த உறவுமுறையைச் செங்குட்டுவனை மையமாகக் கொண்டு காணின் செங்குட்டுவன் தலைமுறை, செங்குட்டுவனின் தந்தை தலைமுறை, செங்குட்டுவனின் பாட்டன் தலைமுறை செங்குட்டுவனின் மகன் தலைமுறை என்ற முறையில் நான்கு தலைமுறைகள் அமைகின்றன. இந்த நான்கு தலைமுறையினர் காலம் சுமார் 100 முதல் 150 ஆண்டுகள் என்று கொள்வது......

இலங்கைக் கயவாகு அரசன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையமைத்துவிழா எடுத்தபோது வந்திருந்தான் என்று கூறப்படுவதைக் கொண்டு விழா நடந்த காலம் கி.பி. 175 என்று கொள்ளலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தபோது அவன் அரியணையேறி ஐம்பது ஆண்டு நிறைவுற்றிருந்தது. எனவே, செங்குட்டுவன் அரியணை ஏறியது கி.பி. 125 எனத் தெரிகிறது. செங்குட்டுவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது. எனவே, அவன் அரசாண்ட காலம் கி.பி. 125 180 எனக் கருதலாம். இவன் கால இறுதியில் கயவாகு வேந்தன் (கி.பி. 174 196) இலங்கையில் அரசாண்டான் எனத் தெரிகிறது.