பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
103
அடிக்குறிப்புகள்
1. நாரரி நறவிற் கொங்கர் கோவே. (9ஆம் பத்து 8: 19) “கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே, மட்டப் புகர்விற் குட்டுவர் ஏறே, எழாத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை, இலங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந, வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே” (9ஆம் பத்து 10:25-30) “வளைகடல் முழவில் தொண்டியோர் பொருந” (9ஆம் பத்து 8:21).
2. பாரி இறந்த பிறகு பாரிமகளிரைக் கபிலர் விச்சிக்கோவிடம் அழைத்து வந்து அவர்களை மணஞ் செய்துகொள்ளும்படி வேண்டினார். அதற்கு அவன் இணங்கவில்லை (புறம் - 200)
3. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுத்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழிஇய அளப்பருங்கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன் பட்டெனக், கண்டது நோனானாகித் திண்தேர்க், கணையன் அகப்படக் கழுமலந்தந்த, பிணையலங் கண்ணிப் பெரும்பூண்சென்னி”(அகம் 44: 7-14).
4. P. 68 Ceras of Sangam Period K.G.Sesha aiyar).
5. பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 86- 94. Date of Ko - Chenganan, Journal of Madras University Vol. XXXI No. 2. P. 177-82).
6. நன்மரம் துவன்றிய நாடு பல தரீஇப், பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், இட்டவெள்வேல் முத்தைத் தம்மென… உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன் பெற்ற ஊரினும் பலவே.” (9ஆம் பத்து 5) இந்தச் செய்யுளின் பழைய உரை இதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறது. “இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் ..... கபிலன் பெற்ற ஊரினும் பல.”
7. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று” (9ஆம் பத்து பதிகம்)