உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

281


பெயர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. பொய்கையூர் அல்லது பொய்கைநாட்டைச் சேர்ந்தவர் ஆகையினால் பொய்கையார் என்னும் பெயர்பெற்றார் என்று கருதுவது தவறாகாது பொய்கையார் என்னும் பெயருடைய புலவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். கடைச்சங்க காலத்திலே இருந்த களவழிநாற்பது பாடிய பொய்கையாரும் இந்தப் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். கி. பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் செங்கட்சோழன் காலத்தில் இருந்த பொய்கையார் வேறு, கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கையாழ்வார் வேறு.1

திருமாலிடத்தில் பக்தியுடையவரான இவர் யோகியாய்த் தியானத்தில் அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். உலகப்பற்றை அறவே ஒழித்த இவர், தமது காலத்தில் நிகழ்ந்த பௌத்தசமண சமயக் கலகங்களிலும் கருத்தைச் செலுத்தாமல் ஒதுங்கியிருந்தார். ஆகையினால்தான் இவருடைய பாடல்களில் பௌத்த சமண சமயங்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படவில்லை.

இவர், இயற்பா முதல் திருவந்தாதியை இயற்றினார். இது அந்தாதித்தொடரில் நூறு வெண்பாக்களையுடையது.

இவர், பேயாழ்வார் பூதத்தாழ்வார் ஆகிய இருவரையும் திருக்கோவலூரில் சந்தித்தார் என்றும், திருமழிசையாழ்வாருடனும் பழகியவர் என்றும் இவர் வரலாறு கூறுகிறது.

பூதத்தாழ்வார்

இவர் கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே பிறந்தவர். இவரும் திருமால் பக்தராக இருந்தவர். உலகப்பற்றை அறவே நீத்தவர். பௌத்தசமண சமயக் கலகங்களில் தலையிடாமல் யோகியாக வாழ்ந்தவர். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார்களுடனும் திருமழிசையாழ்வாருடனும் நட்புடையவன். இவர் இயற்றிய இயற்பா - இரண்டாந்திருவந்தாதி, நூறு வெண்பாக்களாலான அந்தாதித் தொடையால் அமைந்தது.

பேயாழ்வார்

இவர் சென்னைப்பட்டினத்துக்கு அடுத்த மயிலாப்பூரில் பிறந்தவர் இவரும் திருமால் பக்தராயும் யோகியாயும் இருந்தவர். மற்றச் சமயப் பூசல்களில் தலையிடாதவர் பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார்