உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

359


என்னும் சுந்தரமூர்த்தி நாயனார். சைவ சமய துரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளை உலகத்துக்களித்த பெருமை வாய்ந்தவர்கள் இவர்கள்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டத் தொகையில், இவர்களைப் போற்றியுள்ளார்.

“என்னவனாம் அரனடியே யடைந்திட்ட சடையன்
        இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
        ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே”

என்று அவர் பாடியுள்ளார். மேலும் தாம் அருளிய கலைய நல்லூர் தேவாரத்திலும்,

“நண்புடைய நற்படையன் இசைஞானி
சிறுவன் நாவலூர்க் கோன்”

என்று இவர்களையும் தம்மையும் கூறியுள்ளார்.

மானக்கஞ்சாற நாயனார்

கஞ்சாறூரில் பரம்பரரைச் சேனாபதித் தொழில் புரியும் குடும்பத்தில் மானக்கஞ்சாற நாயனார் பிறந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சைவ அடியார்களுக்குத் தொண்டு செய்பவர். பிள்ளைப் பேறின்றி இருந்த இவருக்குச் சிவபெருமான் திருவருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து மணப்பருவம் அடைந்தது.

பெருமங்கலம் என்னும் ஊரிலே ஏயர்குடியிலே பிறந்த கவிக்காமர் என்பவர், சில பெரியோர்களை அனுப்பி, மானக்கஞ்சாறர் மகளைத் தமக்கு மணம் செய்விக்கும்படி கேட்டார். மானக்கஞ்சாறர் அதற்கு உடன்படவே திருமணத்திற்கு நன்னாள் குறிக்கப்பட்டது. அச்சமயத்தில் மாவிரத சைவத்தைச் சேர்ந்த ஒரு முனிவர், மணமகள் இல்லத்திற்கு வந்தார். வந்த முனிஒவரை மானக்கஞ்சாறர் வரவேற்று வணங்கினார். முனிவர், “உமது இல்லத்தில் என்ன சிறப்பு நடை பெறுகிறது?” என்று கேட்க, அடியார், “அடியேன் மகளுக்குத் திருமணம் நிகழ்கிறது” என்று கூறி, மகளை அழைத்து முனிவரை வணங்கச் செய்தார்.