உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

397



மதுரை நகரில் அரியணையில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அமர்ந்தபின் பழையன் மாறன் அவன் படைத்தலைவனாக விளங்கினான். மோகூர் ஆட்சிப் பொறுப்பும் அவனிடம் இருந்தது. கோசர் படையில் தலைவனாகவும் கோசர் குடிமக்களைத் தன் அரசவையில் கொண்ட மன்னனாகவும் இவன் விளங்கினான்.

மேற்கூறப்பெற்ற போரில் இவனது காவல்மரமான வேம்பு வெட்டி வீழ்த்தப்பட்டது. அம் மரத்தின் அடித்துண்டை வெற்றி பெற்ற செங்குட்டுவன் முரசு செய்து கொள்வதற்காகத் தன் தலைநகருக்கு இழுத்துச் சென்றான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோன்பிற்காகக் களைந்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வெட்டிய வேப்பமரத்துண்டைக் கட்டி யானைகளில் பிணைத்து தன் தலைநகர்க்கு இழுத்துச் சென்றான். இந்தப் போரில் பழையன் மாறன் மாண்டிருக்கலாம்.[1]

சிறப்புகள்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு இவன் பலபோர்களில் வெற்றி தேடிச் தந்திருக்கிறான். இதனைப் பாராட்டி நெடுஞ்செழியன் இவனுக்கு வேலைப்பாடு அமைந்த மாலை ஒன்றைச் சூட்டிச் சிறப்பித்தான்; மாறன் என்னும் பட்டத்தையும் அளித்தான்.[2] பழையன் என்று பொதுப்பட வழங்கப்பட்டுவந்த இவன், இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பழையன் மாறன்’ என்று வழங்கப்படலானான் என்பதைப் ‘பெரும்பெயர் மாறன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது.

தோற்றம் - குடி

‘நெடுந்தேர் இழையணி யானைப் பெரும்பெயர் மாறன்’ என இவன் சிறப்பிக்கப்படுதலால், தேரிலும் யானையிலும் இவன் உலாப்போந்த காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. பழையன் இவனது பெயர். இவன் பழையர் குடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இளம் பழையன் மாறன்

இவன் ‘வித்தை’ என்னும் இடத்தையாண்ட அரசன். இவன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டுத் தோல்வியுற்றான்.[3] பெயர் அமைதிகொண்டு பழையன் மாறனின் தம்பியாக இவன் இருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இருவரும் மாறன் என்ற

  1. 84
  2. 85
  3. 86