உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

403



பெரும்பெயர் வழுதி

இவன் (பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்) ‘வழுதி’ என்று குறிப்பிடப்படுகிறான். பாண்டியருள் ‘கவுரியர்’ என்னும் குடியினரும் ஒருவராவர். தனுஷ்க்கோடியை அடுத்த பகுதியிலும் கவிரம் என்று சங்ககாலத்தில் வழங்கப்பெற்ற செங்கோட்டைப் பகுதியிலும் இவர்கள் வசித்தனர். இவர்களுடைய வழித் தோன்றல்களில் ஒருவன் பெரும்பெயர் வழுதி.[1] இவன் போரில் வெற்றி பெற்று யானை மீதேறி உலா வந்தான். ‘தவிரா ஈகைக் கவுரியர் மருக’ என்று கூறப்படும் பகுதியில் இவனது முன்னோர் கொடைச் சிறப்புடன் இவனது கொடைச் சிறப்பும் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. வழிப்பறிமிக்க காட்டு வழிகளில் புலவர்கள் இவனை நாடிப் பரிசில் பெறுவதற்கு வருவார்கள் என்றும். அவர்கள் வந்ததும் அவர்களுடைய குறிப்பறிந்து உதவ வேண்டும் என்றும் அவனுக்கு அறிவுறுத்திப் புலவர் பாடியுள்ளனர்.

அகன்ற மார்பு, உலர்ந்த சந்தனம், கால்களில் பொன்னால் செய்யப் பெற்ற வீரக்கழல் இவற்றுடன் காணப்பட்டான். நிலமே தலைகீழாக மாறினாலும் வாக்குத் தவறக்கூடாது என இவன் அறிவுறுத்தப்பட்டிருக்கிறான். இவனுடைய மனைவி செம்பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த கற்பரசியாக விளங்கினாள். இவன் மதுரையில் இருந்த ஆட்சி செலுத்தியதாகத் தெரிகிறது. [2] கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வழுதி ஒருவன் ‘வாடா வேம்பின் வழுதி’ என்றும், ‘அரண் பல கடந்த முரண் கொள் தானை’ உடையவன் என்றும் கூறப்படுகிறான்.[3] கூடல் நகரத் தலைமை வேறு எந்த வழுதிக்கும் குறிப்பிடப்படாததால் இவனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே கருதலாம். இவன் பல கோட்டைகளை வென்றபோது இவனுடைய வலிமைமிக்க கைகளில் ஒளிபொருந்திய வாள் ஒன்று சிறப்புற்று விளங்கியது. இதனால் இவன் ‘கருங்கை ஒள்வாள்’ என்ற அடைமொழியைத் தன் பெயருக்குமுன் பெற்றான்.

குறுவழுதி

‘அண்டர் மகன் குறுவழுதியார்’ என்னும் பெயருடன் குறிக்கப்படும் இவரும் புலவர் என்ற நிலையிலேயே காணப்படுகிறார். அண்டர் என்போர் ஒரு குடியினர் ஆவர்.[4] நள்ளி என்ற அரசனுடைய

  1. 113
  2. 114
  3. 115
  4. 116