உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


அவர்கள். இவர் ஆங்கிலத்தில் இயற்றியுள்ள “இராமாயணமும் இலங்கையும்” என்னும் நூல் காண்க. இந்த இடம் விந்திய மலையை அடுத்து இருந்ததென்று கூறுகிறார்.[1]

பந்தர்கரின் முடிவு

திரு. பந்தர்கர் என்பவர், தாம் எழுதிய “தண்ட காரண்யம்” என்னும் கட்டுரையில், மகாராட்டிர தேசந்தான் பண்டைக் காலத்தில் தண்டகாரண்யமாக இருந்தது என்றும், இலங்கை, கிஷ்கிந்தை முதலியன மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தன என்றும் கூறுகின்றார்.[2]

ஹிராலால் ஆராய்ச்சி

திரு. ஹிராலால் என்பவர், தாம் எழுதிய “இராவணன் இலங்கை இருந்த இடம்” என்னும் கட்டுரையில் இச்செய்திகளைக் கூறுகிறார்: “விந்தியமலையைச் சார்ந்த மேகலா மலைத்தொடரின் அமரகண்ட சிகரத்தில் இராவணன் இலங்கை இருந்தது; கொண்டர், ஓரானர், சபரர் முதலிய குறிஞ்சிநில மக்கள் அவ்விடங்களில் வாழ்கின்றனர். இவர்களில் கொண்டர் தம்மை இராவண வமிசத்தினர் என்று கூறிக்கொள்வதோடு, 1891 இல் எடுத்த ஜனக்கணக்கில் தம்மை இராவணவம்சம் என்றே பதிவு செய்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த இவர்களுடைய அரசன் ஒருவன், தனது பொன் நாணயத்தில், தன்னைப் ‘புலத்திய வமிசன்’ என்று பொறித்திருக்கிறான். இதனால், கொண்டர் இராவண குலம் என்று சொல்லிக்கொள்வது உறுதிப்படுகிறது. ஓரானர் என்னும் இனத்தவர் பண்டைய வானரர் இனத்தைச் சேர்ந்தவர். கொண்டர்களுக்கும் சபரர்களுக்கும் பகை இருந்தபடியால், சரபர் இராமன் பக்கம் சேர்ந்தனர். (இராமனுக்கு விருந்திட்ட சபரி என்பவள் சபரர் குலத்தைச் சேர்ந்தவள். இது அவள் இயற்பெயர் அன்று; குலப்பெயர்.) இராமன் இலங்கைக்குக் கடந்துசென்ற ‘சாகரம்’ கடல் அன்று; ஏரியாகும்.” இவ்வாறு இவர் தம்முடைய கட்டுரையில் கூறுகிறார்.[3]

கிபியின் கூற்று

திரு. கிபி என்பவர் தாம் எழுதிய “அமரகண்டக் மலையில் இருந்த இராவணனுடைய இலங்கைக்குச் சுற்றுப் புறத்திலிருந்த

  1. 1
  2. 2
  3. 3