பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
483
பௌத்த சங்கத்துககுத் தானங்கொடுத்தாள்’ என்று இன்னொரு பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது.43 இவற்றிலிருந்து உரோகண நாட்டையரசாண்ட பாண்டிய குல அரசர் கால்வழியை இவ்வாறு அறிகிறோம்.
மஜிமகாராசன் (மச்சமகாராசன்)
│
காமணி அபயன்
(தேவனாம்பிய திஸ்ஸனுக்கும் அசோகச் சக்கரவர்த்திக்கும் சமகாலத்தில் இருந்தவன். அநுராதபுரத்தில் போதிமரத்தைத் திஸ்ஸன் நட்டு விழாக் கொண்டாடியபோது, அவ்விழாவுக்குச் சென்றிருந்தான். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாதன், உயிருக்கு அஞ்சி இவனிடம் அடைக்கலம் அடைந்த போது, அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.)
│
┌───────────────┬──────────────┬
தர்மராசன் உதிராசன் மற்றும் எட்டு மக்கள் (தசாபாதிகர்)
││
மகாதிஸ்ஸன் அநுராதி (மகள்)
│
┌───────────────┬
சவெர (மகள்) (மகள்)
(பௌத்த சங்கத்துக்கு
14 குகைகளைத் தானங்
கொடுத்தாள். கொட்ட
தாமூஹெல சாசனங்கள்.)44
மகாநாகன் அடைக்கலம் புகுந்தது
உரோகணநாட்டை அரசாண்ட பாண்டிய மரபு மச்சராசர் பரம்பரையைக் கூறினோம். இனி, தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாதன். உரோகண நாட்டுக்குப் போய்க் காமணி திஸ்ஸனிடம் அடைக்கலம் அடைந்ததையும், புகலிடம் பெற்றுக் காமணி திஸ்ஸனுடைய மக்கள் தசாபதிகரைக் (பத்துச் சகோதரர்களைக்)