உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


மேற்கூறிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டையர சாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேர, சோழ, பாண்டிய நாட்டையர சாண்டனர் என்று கருதலாம்.

களப்பிரர் எப்போது வந்தனர்?

வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள் என்று கூறினோம். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது கி. பி. 275இல் என்று கூறுகிறார் (A Comprehensive History of India, Vol. II, Edited by K. A. Nilakanta Sastri, 1956, p. 550). கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்று திரு. சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார் (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவப் பண்டாரத்தார், 1966, பக். 32). திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார், கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று கூறுகிறார். "சங்கம் (வச்சிரநந்தி கி. பி. 470இல் நிறுவின திராவிட சங்கம்) கி. பி. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. கி.பி. 6 ஆம்நூற்றாண்டு தொடங்கினபோது தமிழ்நாட்டின் அரசியல் விரைவாக மாறுதல் அடைந்தது. இந்தக் காலத்தில் தான் களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் நிகழ்ந்தன” என்று அவர் எழுதுகிறார் (Studies in South Indian Jainism, M. S. Ramasami Ayengar, 1922, pp. 52-53). இவர் கூறுவது ஏற்கத்தக்கது அன்று. களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகுதான் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்டதே தவிர, வச்சிரநந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்ட பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்படவில்லை. ஆகவே, கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்று இவர் கூறுவது தவறு. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப் பிரர் ஆட்சி ஏற்பட்டது என்பதில் ஐயம் இல்லை. மேலும், இராமசாமி அய்யங்கார் இன்னொரு செய்தியையும் கூறுகிறார். “தமிழ்நாட்டில் ஜைன மதத்தை மேலும் உறுதியாக நிலை நாட்டுவதன் பொருட்டு ஜைனர் களப்பிரரைப் படையெடுத்து வருமாறு அழைத்தார்கள் என்று தோன்றுகிறது" என்று இவர் எழுதுகிறார் (Ibid, p. 56). இவ்வாறு இவர் கூறுவதற்குச் சான்று இல்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்