உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

101


8. இலங்கைத் துறைமுகங்கள்

மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)

மணிபல்லவம் என்றும் ஜம்புகொல பட்டினம் என்றும் பெயர் பெற்ற மிகப் பழைய துறைமுகப்பட்டினம் இலங்கையின் வடகோடியில் இருந்தது. இது இப்போதைய யாழ்ப்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. மணிமேகலைக் காவியம் இதை மணிபல்லவம் என்றும் இலங்கைப் பாலிமொழி நூல்கள் ஐம்புகொலபட்டினம் என்றும் கூறு கின்றன. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. அக்காலத்தில் பேர் போன துறைமுகப்பட்டினமாக விளங்கிய இங்கு வாணிகப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக இல்லை. கப்பல் போக்குவரத்துக் குரிய துறையாகவும், தமிழ் நாட்டிலிருந்து கிழக்கே நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கிக் குடிநீர் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருந்தது. இத்துறைமுகத்திலிருந்து தெற்கே இலங்கையின் அக்காலத்துத் தலைநகரமான அநுராத புரத்துக்கு (அநுரைக்கு) நெடுஞ்சாலை யிருந்தது.

இலங்கையை யரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் (கி.மு. 247- 97) என்பவர் இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட அசோக சக்ர வர்த்தியிடம் தூதுக் குழுவை அனுப்பின போது அத்தூதுக் குழு மணி பல்லவத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிப் புறப் பட்டது. புறப்பட்டு ஏழுநாள் வடக்கே கடற்பிரயாணஞ் செய்து தாமலித்தி துறைமுகத்தை யடைந்து அங்கிருந்து கங்கை யாற்றில் புகுந்து பாடலிபுரத்துக்குச் சென்று அசோக சக்கரவர்த்தியைக் கண்டது (மகா வம்சம் XI: 23-24). பிறகு, மீண்டும் அதே வழியாகக் கப்பலில் பிரயாணஞ் செய்து ஜம்புகொல பட்டினத்தை யடைந்தது (மகாவம்சம் XI : 33)

அசோக சக்கரவர்த்தி புத்த கயாவிலிருந்த போதி மரத்தின் கிளையை வெட்டிச் சங்கமித்திரையின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பின போது சங்கமித்திரையும் அவருடைய பரிவாரமும் போதி (அரச) மரக்கிளையுடன் மரக்கலம் ஏறி ஜம்புகொலப் பட்டினத்துக்கு வந்து இறங்கினார் (மகாவம்சம் XIX : 23), தேவனாம்பிரிய திஸ்ஸன் அமைச்சர்களுடனும் பரிவாரங்களோடும் ஜம்புகொல துறைக்கு