தொ.பரமசிவன் 41
வேலையெல்லாம் ஸ்மார்த்தப் பிராமணர்களுக்கு மட்டும் கல்வியும் வடமொழிக் கல்வியும் கொடுப்பதுதான். தங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் இவர்கள் சன்னியாச தீட்சை கொடுப்பார்கள்.
ஆண்டுக்கு 4 மாதம் இவர்கள் வேறு இடத்தில் தங்க வேண்டும். அதற்கு 'சதுர் மாஸ்ய விரதம்' என்று பெயர். மறைந்த சங்கராச்சாரியார் இப்படித்தான் கலவையிலே தங்கினார். இவர்கள் தங்கியிருக்கிற இடம் மடம்தானே தவிர ஆலயம் அன்று.
இவர்களுடைய மற்ற வழக்கங்கள் எப்படி?
இவர்கள் துறவி ஆனபிறகு சொந்த வீட்டிற்குச் செல்லக்கூடாது. ஆனால் இப்போது இருக்கிற சங்கராச்சாரியார்கள் சொந்த ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள். தன் செல்வாக்கினால் சொந்த ஊருக்கு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் துறவிகளுக்குச் சொந்த ஊர்ப்பற்று போகவில்லை என்பதுதானே பொருள். அதுபோல இவர்களுடைய வழிபாட்டில் வடமொழியைத் தவிர மற்ற எந்த மொழிக்கும் இடம் கிடையாது. அது தீட்டாகும்.
மற்றொரு செய்தி. இவர்கள் விதவைகள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். ஆனால் இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது மறைந்த சங்கராச்சாரியாரைப் பார்க்க விரும்பினார். இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நடுவிலே நீர் இருந்தால் தீட்டு போய்விடும் என்று சொல்லி ஒரு சிறிய கிணற்றின் ஒருபுறமாக சங்கராச்சாரியாரையும் மறுபுறமாக இந்திராகாந்தி அம்மையாரையும் அமர வைத்தார்கள். துறவி என்பவன் எல்லோருக்கும் எளியவன் என்பது நம்முடைய கோட்பாடு. ஆனால் இவர்கள் அமர்கிற இடத்தில் இவர்களைவிட உயரமாக யாரும் ஆசனத்தில் அமரக்கூடாது. குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட இவர்களுக்கு முன்னால் தரையில் அமர்ந்துகொண்டு. அல்லது நின்று கொண்டு பேசு வேண்டும். சிறைச்சாலை வாசத்திலும், காவல்துறை வாகனத்திலும் விமானப் பயணத்திலும், இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை.
மற்ற மடங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவிலே ஏராளமான மடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மடம் என்று சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன. ஜீயர் மடங்கள் இருக்கின்றன. திருவாவடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று சைவ,வைணவ
மடங்கள் பல இருகின்றன. எல்லா மடத்துக்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு. அதாவது
முதலாக