தொ.பரமசிவன் 47
மறைந்து போன சங்கராச்சாரியாரின் பேச்சுக்களை தெய்வத்தின் குரல் என்றார்கள். ஜெயேந்திரரின் ஆன்மீகம் குறித்து?
வெளிப்படையாகவே, ஜெயேந்திரர் படிப்பாளி அல்ல. இவருக்கு வேதப் பயிற்சியோ, மற்ற பயிற்சிகளோ கிடையாது. அதைப் பற்றியே பேசுவதும் கிடையாது. இவர் சொன்னதெல்லாம். பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது. விதவைப் பெண்கள் தரிசுநிலம் என்பது மாதிரியான கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னவர். ஜெயேந்திரடமிருந்து எந்தக் கல்வி ஞானத்தையும் நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படித் தன்னை பெரிய கல்விமானாக, ஞானியாக அவர் காட்டிக் கொள்ளவில்லை. எதுவும் பேசவில்லை. ஒருமுறை சொன்னார், “கருணாநிதி என்னைப் பற்றிச் சொன்னார். நான் தெய்வத்தைக் கேட்டுக் கொண்டேன். கருணாநிதியைப் படுக்கப் போட்டுவிட்டது" என்றார். தொலைக்காட்சிப் பேட்டியில் வழக்கறிஞர் அருள்மொழி கேட்டது போல, துறவியானதற்கு யாரேனும் விழா கொண்டாடுவார்களா? இவர் தன்னுடைய துறவின் வெள்ளிவிழாவினையும் கொண்டாடினார், இவர் துறவியாகி ஐம்பதாண்டுக் காலம் ஆனதற்கு விழா கொண்டாடினார். எல்லா வகையான துறவு என்பது பற்றுக்களிலிருந்து விலகி நிற்பது. இந்த மடத்தில் தான் கனகாபிஷேகம் நடந்தது. துறவிக்கு எதற்குத்தங்கம். மடத்திலே எதற்குத் தங்கம்? மடத்திலே தங்கம் வந்தால் அதைத் தொடர்ந்து வருகிற எல்லாக் கேடுகளும் வரத்தானே செய்யும்.இது நிரூபிக்கப்படுகிறதோ நிரூபிக்கப்படவில்லையோ, மக்கள் நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றன. இவருக்கு தங்க மலர்களால் பூசை செய்யப்பட்டது. அரசியல்வாதி போல மலர்க்கிரீடம் சூட்டிக் கொண்டதும் நாம் கண்கண்ட உண்மை அல்லவா? இவர் மடாதிபதி இல்லை. ஒரு மறைமுகமான அரசியல் இயக்கமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று கைது செய்யப்பட்டுள்ள 'சங்கராச்சாரி' தலித்துகளுக்கு நிறைய உதவிகள் செய்தார் என்கிறார்களே?
அங்குக் கிடக்கிற சொத்திலே ஒருவிழுக்காடு கூட இருக்கிறது. அதுவும் திராவிட இயக்கத்தையும் மீறி வளர்ந்து கொண்டு மக்களுக்குஉதவியாக வந்ததில்லை. தலித் இயக்கம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதனைத் தின்று செரிக்க வேண்டும் என்ற முயற்சியிலே இவர்கள் காட்டிய நாடகம். ஏற்கெனவே கையில் ஊடகங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் இருப்பதால் இவர்கள் எதைச் செய்தாலும் மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கிறது.