48 'இந்து' தேசியம்
நம் கண் முன்னாலே தன்னை ஒரு தலித் தொடுவதற்குச் சங்கராச்சாரியார் அனுமதிப்பாரா? ஒரு தலித் வீட்டிலிருந்து ஒரு குவளை தண்ணீர் வாங்கி அருந்துவாரா? செய்ய மாட்டார். அப்புறமென்ன தீண்டாமைதானே! கொடுமையான தீண்டாமையை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்தச் சங்கரமடத்தில் இருப்பவர்கள் மட்டும்தான். பிராமணர்கள் தவிர வேறு யாரும் இவர்களைத் தொடக்கூடாது. முதன்முறையாகக் கைது செய்யப்பட்டு வருகிற பொழுதுகூட, அந்த வேனில் பிராமணர்கள்தான் வரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் தீண்டாமையை அதனுடைய கொடுமையான உக்கிரமான வடிவத்தில் கடைப்பிடித்து வருகிறவர்கள், காஞ்சி மடத்துப் பிராமணர்கள்தான். சின்னவர் விஜயேந்திரர் அவராவது மற்ற சாதிக்காரரைத் தொடுவாரா? தொடமாட்டார்.
காஞ்சிபுரத்துக்கு அருகில் கூத்தரப்பாக்கம் கிராமத்திலே தலித்துக்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய உரிமைகேட்டதற்கு சங்கராச்சாரி கட்டைப் பஞ்சாயத்திற்குப் போனார். “நீங்கள் தனிக் கோயில் கட்டிக் கொள்ளுங்கள்” என்றார். தலித் பிள்ளையார் வேறு, உயர்சாதிப் பள்ளையார் வேறா? அவர்கள் அப்படித்தான் கருதினார்கள். இந்துவாக, இருக்க வேண்டும். ஆனால் அடிமைத்தனத்தின் அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இரண்டாவது தலித் மக்கள் சுத்தமாக இல்லை என்று சொன்னார்களே. அதுவே அவர்களைக் கொச்சைப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதுமான வேலைதானே.
சில தலித் தலைவர்களிடையில் இருக்கிற அதிகாரப் போட்டியில் ஒன்றிரண்டு தலைவர்கள் இவர்கள் பக்கம் ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் நடந்தது. கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு வருகிற பொழுது தலித் மக்கள் பெரிய சாமியார் வருகிறதால் உ வசப்பட்டு காலில் விழுந்து வணங்கிவிடக் கூடாது என்று சொல்லி, யாராவது தெரியாமல் தொட்டுவிட்டால் என்ன செய்வது என்று காலிலே பட்டுத்துணிக் கட்டிக் கொண்டுதான் நின்றார். அந்தளவுக்கு கொடுமையான தீண்டாமையைக் கடைப்பிடித்தவர். தீண்டாமை ஒழிப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முழுத்தகுதி வாய்ந்தவர் இவர். தீண்டாமைக் கொடுமையைச் சங்கராச்சாரியார் இன்னமும் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறார். அதை அரசாங்கம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரை அழைத்து வருகிற காவல் துறையினரை அதிகாரிகளைக் கூட நாம் தொலைக்காட்சியில் பார்க்கலாம். மற்றக் குற்றவாளிகளைப் போல நடத்தாமல் அவரை ஓரிடத்திலிருந்து தனியே நடத்தி கூப்பிட்டு வருவதைப் பார்க்கலாம்.