தொ.பரமசிவன் 49
இந்த கைது நடவடிக்கையின் முடிவு என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
கைது நடவடிக்கையின் முடிவு என்பது ஒரு வழக்கைப் பொறுத்த விசயம். நீதிமன்றத்தைப் பொறுத்த விசயம். ஆனால் இந்த மடம் மக்களுக்கான மடமல்ல. இந்த மடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிற. பிராமணர்களில் ஒரு பிரிவினரின் நலன்களுக்காக மட்டும் நடக்கிற மடம். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா மடங்களிலும் தமிழ்மொழியை வழிபாட்டில் விலக்கி வைத்திருக்கிற ஒரே மடம். எல்லா மடங்களிலும் நடைபெறும் ஒழுக்கக்கேடு இந்த மடத்திலும் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்து போயிற்று.
வேறு வழியில்லாமல்தான் இந்தப் பத்திரிகைகள் சில விசயங்களையாவது இப்பொழுது வெளியிடுகின்றன.
மக்கள் ஆதரவாக என்றில்லாமல் பத்திரிகையின் ஆதரவினால் கட்டி எழுப்பப்பட்ட மடத்தின் பிரம்மாண்டம் உடைந்துபோய்விட்டது. ஏனென்றால் ஒரு காலத்தில் நூற்றுக்கு நூறு பேராதரவு தெரிவித்த பத்திரிகைகள் எல்லாம் சங்கரமடத்திற்கு வந்தாக வேண்டும். சங்கர மடத்தை ஆதரித்து எழுத வேண்டும் என்று இருந்தது. பெரியாரின் குரல் மட்டும் ஒற்றைக் குரலாகத் தொடர்ந்து ஒலித்தது. இன்று இந்த மடத்தின் பிரமாண்டம் மணற்கோட்டை போல் சரிந்துவிட்டது. பெரியார் கண்டித்து ஆனால் 1932லேயே சங்கராச்சாரியைப் எழுதியிருக்கிறார். பெரியாரை மக்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டார்கள். சங்கராச்சாரியார் கைதுக்கு தமிழ்நாட்டில் ஒருசதவீத மக்கள் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. இந்த மடம் மக்களாலோ தத்துவத்தாலோ வளர்ந்ததல்ல.
உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்று 1928லேயே பெரியார் பேசியிருக்கிறார்.
அன்றே மடாதிபதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டுபேசிய பெரியாரை இன்றாவது புரிந்து கொள்ள முயல்வார்களா?
நான் திரும்பவும் சொல்கிறேன்.
எல்லா மடங்களும் ஒவ்வொரு சாதிக்குரியன. எல்லா மக்களுக்கும் உரிய மடம் என்ற ஒன்று கிடையாது. மடங்களினுடைய செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பெரியாரியச் சிந்தனைக்கு வெற்றி அரசியல் கட்சிகள் எல்லாம்