50 'இந்து' தேசியம்
சாதிமயமாகிக் கொண்டிருக்கின்றன.அதிகாரக் கட்டுமானம் மடங்களில் உள்ள ஒதுக்கல்கள் எல்லாம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. எந்த மடமும் மதிப்புக்குரிய மடமல்ல. எந்த மடமும் எல்லோருக்கும் உரியதல்ல. குறிப்பிட்ட சாதிக்குரியது என்று புரிந்து கொள்ள வேண்டும் அந்தச் சாதியினரின் நலனுக்காகத்தான் மடங்கள் இருக்கும். எல்லா மடங்களும் தங்களின் மதத்துவத்தைக் கைவிட்டு நெடுங்காலமாகிவிட்டது. சாதி சார்ந்துதான் மடங்கள் இயங்குகின்றன. சாதி சார்ந்து இயங்குகின்ற அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் சாதி சார்ந்து இயங்குகின்ற மடங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
தமிழ்ப் பத்திரிகைகள் பலவாறாகச் சொல்கின்றனவே, எது உண்மை?
எதுஉண்மையோஉண்மை இல்லையோ? நமக்குத் தெரிந்திருக்கிற, விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைப் பற்றி மட்டும் பேசலாம். இந்த மடம் ஏராளமான சொத்துக்களைத் திரட்டியிருக்கிறது. ஏராளமான சொத்துக்கள் இருக்கும் பொழுது நடைபெறும் கேடுகள் இங்கும் நடந்திருக்கிறது. மடங்களுக்கும் கொலைகளுக்கும் வரலாறு நெடுகிலும் சம்பந்தம் உண்டு. எல்லா மடங்களின் அழிவுகளுக்கும் அம்மடங்களில் உள்ளாக நடைபெறும் ஒழுக்கக்கேடுகள்தான் காரணம். இந்த மடத்திலும் அது நடந்தது. இந்த மடம் பொது விதிக்கு அப்பாற்பட்டது என்ற மாதிரி நினைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிக் காட்டிக் கொண்டிருந்த பத்திரிகைகள் காட்சி ஊடகங்கள் இதையும் இன்றைக்கு விவாதத்திற்குள்ளாக்க வேண்டும்.
ஜெயேந்திரர் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரது கைது அரசியலை உலுக்கியிருக்கிறது. இதன் விளைவுகள் என்னவாகவும் இருக்கலாம். காஞ்சி மடம் குறித்த ஒரு பிம்பம் இன்று சிதைந்துள்ளது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீங்கள் சொன்னதுபோல எந்த மடாதிபதி கைதும் அரசு நிர்வாகத்தை உலுக்கியது கிடையாது. ஏனென்றால் இவர் ஒரு அரசியல்வாதி போலதான் செயல்பட்டார். அரசியல்வாதிகளால் தீர்க்க முடியாத அயோத்திப் பிரச்சனையைத் தான் தீர்ப்பதாக விமானமேரி டெல்லிக்குப் போனார். எதுவும் நடக்கவில்லை. எல்லா மதத்திற்கும் ஒரு நுண்ணரசியல் தளம் உண்டு. திருநாவுக்கரசருக்கும் திருஞான சம்பந்தருக்கும் கூட ஒரு நுண்ணரசியல் தளம் இருந்தது. ஆனால் இவர் வெளிப்படையாக ஓர் அரசியல் கட்சித் தலைவரைப் போலவே நடந்து கொண்டார். இந்து மதவாதக்கட்சிகள் அதற்குத் துணை செய்தன. அரசியல்வாதிகள் போல் மனிக்கரட வாங்கினார். இதன்