உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 59

விதிவிலக்காக திராவிட பாகவதன் 1914 டி.கே.சீனிவாச ஐயங்கார் (வைணவ மாத இதழ்). திராவிட் நேசன் 1891 தஞ்சை (சைவம்) மாறாக அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய திராவிடப் பாண்டியன் (1888) இதழ் திராவிட என்ற சொல்லை மொழிக் குடும்பம், நிலப்பகுதி ஆகியவற்றுக்கும் அப்பால் சமூக, அரசியல் தளத்தில் முன் வைத்திருக்கிறது. இந்து என்ற சொல் இந்துத்துவக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக மாற்றப் பட்டதை பின்னர் காணலாம். இவரே 1890இல் திராவிட மகாஜன சபையினையும் தோற்றுவிக்கிறார். தேசியக் காங்கிரஸ் அல்ல, பார்ப்பனக் காங்கிரஸ்' என்று 1908இல் எழுதியவரும் இவர்தான்.
தமிழ்நாட்டு மக்களின் அமைப்பு ரீதியான முதல் அசைவுக்கு 1852இல் தொடங்கப்பட்ட சென்னை ஜனசங்கத்தினை (Madras Na- tives Association) அடையாளமாகக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர் 1830களில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தொடங்கிய இந்து கல்விச் சங்கம் (Hindu Literary Society) 1840களில் தொடங்கப் பெற்ற சதுர்வேத சித்தாந்த சபை என்னும் அமைப்பு ஆகிய இரண்டினை அறிகிறோம். சதுர்வேத சித்தாந்தம் என்ற பெயரிலிருந்து இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஒரு பார்ப்பன அமைப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 1845இல் திருநெல்வேலியில் கிறிஸ்தவர்கள் மீது இந்துக்கள் நடத்திய தாக்குதலுக்கு அரசு ஆவணங்கள் இந்தச் சபையினையே குற்றம் சாட்டுகின்றன என்று சுந்தரலிங்கம் குறிப்பிடுகிறார்.
சென்னை ஜனசங்கம் (MNA) சென்னையிலிருந்த செட்டிகள், நாயுடு, கோமுட்டிச் செட்டி ஆகியோர் ஆதரவுடன் லெட்சுமிநரசு செட்டியால் தொடங்கப்பெற்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் திருநெல்வேலி சைவ வேளாளரும் வியாபாரியுமான ஜே.ஏ.அப்பாசாமிப் பிள்ளை போன்றோரும் பங்கு பெற்றுள்ளனர். இரண்டாண்டுகளில் இச்சங்கத்தில் அரசியல் விவகாரங்களை முன்னெடுத்துப் போவதா, சமூக சீர்திருத்தத்துக்கு முன்னுரிமை தருவதா என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவு ஏற்படுகிறது. இதிலிருந்து விலகிய சீனிவாசப் பிள்ளை 'இந்து முன்னேற்றச் சங்கம்' (Hindu Pro- gressive Development Society) என்ற அமைப்பைத் தொடங்குகிறார். சென்னை. ஜனசபையின் கிரசண்ட் இதழுக்குப் போட்டியாக 'உதய சூரியன்' (Rising Sun) என்ற இதழைத் தொடங்குகின்றனர். 1853 முதல் 1863 வரை நடந்த இந்தப் பத்திரிகைக்கு வெங்கட்ராய நாயுடு இந்திய தேசிய என்பவர் ஆசிரியர்." பின்னர் ஒரு நூற்றாண்டுக் காலம் இந்திய தேசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/60&oldid=1690844" இலிருந்து மீள்விக்கப்பட்டது