உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 'இந்து' தேசியம்

இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்துக்குமான முரண்பாட்டின் வித்து இங்கேயே தொடங்கிவிட்டதை வரலாற்று மாணவர்கள் எளிதாகவே கண்டு கொள்ள முடிகிறது.
இதன் பின் வங்காளத்தில் பிறந்த கேசவசந்திரன்சென் பிரம்ம சமாஜத்தின் பிரதிநிதியாக 1866இல் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்கிறார். பிரம்மம் பற்றி விசாரத்தை அவருடன் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது அவர்கள் மரபுவழி ஆன்மீகத்தோடு தொடர்புடைய கோட்பாடாகும்.
அதன் பின்னர் 1881இல் கர்னல் ஆல்காட்டும் பிளாவட்ஸ்கி அம்மையாரும் பிரம்மஞானக் கருத்துக்களைப் பரப்பச் சென்னை வந்து, அங்கிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தங்கள் அமைப்புக்கான (Theosophical Society) கிளைகளைத் தொடங்கி வைக்கின்றனர். 2 ஆரிய மதத்தையும் பிற மதங்களையும் படிப்பதும் பொருள் முதல்வாதத்தை வளரவிடாமல் தடுப்பதும், பிரம்ம ஞான சபையின் நோக்கங்களாகச் சொல்லப்பட்டன. தேசிய சமஸ்கிருத இயக்கத்தின் (national Sanskrit Movement) பகுதியாக அடையாறு கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கர்னல் ஆல்காட்டும் பிளாவட்ஸ்கி அம்மையாருக்கும் கோயில் சார்பாக வரவேற்பு தரப்பட்டது. ஆல்காட் அமெரிக்கப் பண்டிதர் என்று பெயர் சூட்டப்பட்டார்.3 சென்னையை அடுத்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும்தான் பழமையான கிளைகள் அச்சபைக்கு ஏற்பட்டன. இவர்களுக்கு முன் மனுநீதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வில்லியம் ஜோன்ஸ், வடமொழி வல்லுநரான மோனியர் வில்லியம்ஸ், ஆகியோர் பெயர்கள் பலமுறை பேசப்பட்டன. முதல் முறையாக இந்தியா வேதப் பெருமை உடைய நாடு இந்திய மதம் என்பது ஆரிய மதம், வடமொழி உயர்வானது" ஆகிய கருத்துக்கள் இந்திய தேசியம் என்பதன் அடிப்படைகளாக உருவாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் இவர்களுக்குக் கிடைத்த வரவேற்பினால் 1882 இறுதியில் (டிசம்பர்) பிரம்மஞான சபையின் தலைமையகம் பம்பாயிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது" (மீண்டும் அவர் 1882இல் ஆறு வாரத் தமிழகச் சுற்றுப்பயணம் செய்தார்) சபையின் கொள்கைகளைப் பரப்ப மதுரை, திருச்சி, குண்டூர். பெல்லாரி ஆகிய இடங்களில் சமஸ்கிருதப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதன் சார்பு நிறுவனமாக 10-21 வயது வரை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக (League of Honour) ஆரிய உயர் மதிப்புக் கழகம் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/61&oldid=1690845" இலிருந்து மீள்விக்கப்பட்டது