உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 61

அமைப்பும் தொடங்கப்பட்டது. 1884இல் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்த சிவசங்கர பாந்தியா (Siva Sankara Pandiah) என்ற குஜராத்திப் பார்ப்பனர் 'இந்து மீட்சிக் கழகம்' (Hin- du Revivalistic Society) என்ற அமைப்பையும் 1887இல் (Hindu Track Society) இந்து சிறுநூல் வெளியீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் தொடங்கினார்.
சிவசங்கர பாந்தியாவைப் பற்றி இங்கு சற்று விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் இவர். ஒரு குஜராத்தி பார்ப்பனர். இந்து பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த ஜி.சுப்ரமணி ஐயருக்கும் தெலுங்குப் பார்ப்பனரான அனந்தாச்சார்லுவுக்கும் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி அதன் தலைமையாசிரியரானார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இந்து கிறிஸ்தவப் பூசலுக்குக் காரணமானார் என்று பச்சையப்பன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். கிறிஸ்தவக் கல்லூரிச் சச்சரவில் இவருக்குத் துணை நின்றவர் அனந்தாச்சார்லு.
சிவசங்கர பாந்தியா தொடங்கிய இந்து சிறுநூல் வெளியீட்டுக்கழகத்தின் வெளியீடுகளிலிருந்து மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 1887இல் சென்னையில் இருந்து வெளிவந்த 'ஆரிய ஜன பரிபாலினி' என்ற இதழும் சிதம்பரத்திலிருந்து சீனிவாச சாஸ்திரி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பிரம்ம வித்யா' பத்திரிகையும் கிறிஸ்தவர்களோடு திட்டமிட்ட ஒரு போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றன. வேதாந்த விசாரணை சபை என்ற பெயரிலும் இவர்கள் சில துண்டறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர்.
ஐரோப்பிய வடமொழி அறிஞரான மோனியார் வில்லியம்ஸும் (Moniar Williams) 1797இல் மனுநீதியை மொழி பெயர்த்த சர் வில்லியம் ஜோன்சும் - (Sir William Jones) இந்த இந்துவாதிகளால் புகழப்படுகின்றனர். 21 பாஷைகளில் வல்லவரான சர் வில்லியம் ஜோன்ஸ் என்பதாக இவர் பெயர் பத்திரிகைகளில் குறிப்பிடப்படுகிறது. இந்து ஜெயபேரிகை என்ற பெயரில் 4 நூல்கள் இந்த சபையினரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆரிய பெண்களுக்கு கல்வி, கிறிஸ்தவர் மத திரியோகத்துவ ஆபாசம் பைபிகளும் உலக சிருஷ்டியின் ஆபாசமும். பாதிரிமார் ஸ்கூல்களில் பெண்கள் படிக்கலாமா என்ப இவர்கள் வெளியிட்ட சில நூல்களின் தலைப்புகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/62&oldid=1691056" இலிருந்து மீள்விக்கப்பட்டது