உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 'இந்து' தேசியம்

போயிற்று. பெரிய நிலக்கிழார்களும், ஜமீன்தார்களும் செல்வாக்கு போய்விட்டனர். கலெக்டரின் பெயரால் மாவட்டத் இழந்து தலைநகரங்களிலும் கவர்னர் என்ற பெயரில் சென்னை நகரத்திலும் வைசிராய் என்ற பெயரில் டெல்லியிலும் புதிய அதிகார மையங்கள் தோன்றி விட்டன. அதிகார மையங்களை நெருங்குவதற்கு ஆங்கிலக் கல்வியே பார்ப்பனர்களுக்கு வழியாக இருந்தது. எனவே கிராமத்து நிலங்களையும், கோயில்களையும், சமஸ்கிருதக் கல்வியையும், குடுமியையும் விட்டு விட்டு ஆங்கிலக் கல்விக்கும், அதிகாரப் பதவிகளுக்கும் ஆசை கொண்ட பார்ப்பனர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, செர்மன் உலக அரங்கில் வெற்றி பெறும் என்ற கணிப்பில் இங்குள்ள பார்ப்பனர்கள் செர்மானிய மொழியினைக் கற்கத் தொடங்கினர். சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகியவற்றை ஒட்டி பார்ப்பனர்களின் புதிய குடியேற்றங்கள் உருவாயின.
அரசாங்கப் பதவிகள் மட்டுமல்லாது பேராசிரியர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகிய பதவிகளையும் பார்ப்பனர் தமதாக்கிக் கொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலிமை வாய்ந்ததாக உருவெடுத்த புதிய துறையான பத்திரிகைத் துறையும் பார்ப்பனர்கள் கொண்டனர். இந்து, வளைத்துக் சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களும் சில சிறிய வார இதழ்களும் புதிய பார்ப்பனக் கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முனைந்து செயல்பட்டன. வலிமை வாய்ந்த பத்திரிகை சாதனத்தின் துணையாலும், வானொலியின் துணையாலும் அது வரை தாங்கள் இழிந்தது என்று ஒதுக்கி வைத்திருந்த தமிழர்களின் பாட்டையும் கூத்தையும் தங்களுக்கெனப் பறித்துக் கொண்டனர். தமிழிகை. கர்நாடக சங்கீதமாயிற்று. தொல்காப்பியம் தொடங்கி, சிலப்பதிகாரம் வரையான தமிழிசை இலக்கணங்கள் அனைத்தும், பார்ப்பனர்களால் பறிக்கப்பட்டன. ஆனால் இவற்றைப் பற்றி பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே.
1993 பிப்ரவரி சுபழங்களா இதழில், கர்நாடக இசை பார்ப்பனர் இசை என்ற கருத்து நிலவுகிறதே' என்ற கேள்விக்கு விமரிசகர் சுப்புடு (ஐயர்) “பொதுவாக அவர்கள்(பார்ப்பனரல்லாதார்) இந்த லயனுக்கு வரல்லே” என்று பதிலளித்தார். எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய் இது தஞ்சை நால்வர் என்று அழைக்கப்படும் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வர்தான் இன்றைய பரதநாட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/87&oldid=1711022" இலிருந்து மீள்விக்கப்பட்டது