தொ.பரமசிவன் 87
நிகழ்ச்சிகளின் முன்னோடிகளாவர். இசை வேளாளர் மரபில் பிறந்த இவர்களின் கலைப் பெரும் பணியினை மறைப்பதற்காகவே, இவர்கள் 'கர்நாடக மும்மூர்த்திகள்' என்று தெலுங்குக் கீர்த்தனங்கள் பாடிய
மூன்று பார்ப்பனர்களை முன்னாலே நிறுத்தினார்கள். முத்துத்தாண்டவர்,
மாரிமுத்தாப்பிள்ளை, சீர்காழி அருணாச்சலக் கவிராயர் ஆகிய தமிழ் இசை ஆசிரியர்கள் மறைக்கப்பட்டனர். கல்கியும், ஆனந்த விகடனும் இருக்கிறபோது, அறிவுலகத் திருட்டுத்தனங்களில் இவர்களுக்கு கவலையேதும் கிடையாது.
தமிழர்களின் கலாச்சாரத் சொத்தைப் பிடுங்கிக் கொண்டு அது பரம்பரையாகத் தங்களுடையதே என்று சாதிக்கும் மேல்சாதி ஏமாற்று வேலை இது. சேர, சோழ, பாண்டிய, விஜய நகர அரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடினாள்? ஏன் இன்னும் திராவிடர் இசை நாகரிகத்தைக் காட்டும் பெருவங்கியமும்(நாதசுரமும்) தவிலும் வாசிக்கப் பார்ப்பனர்கள் முன் வருவதில்லை? இசை வேளாளர் வகுப்புச் சகோதரிகள் ஆடிவந்த சதிர் என்னும் தமிழர் நடனத்தைக் காலனிய ஆட்சி வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடத் தொடங்கினாள். அதற்குப் பரதநாட்டியம் என்று புதுப் பெயர் சூட்டப் பெற்றது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழுகிற தமிழன் கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு என்றும் காலங்காலமாக அவற்றை அவர்களே வளர்த்தனர் என்றும் நம்புகிறான். இந்த ஏமாளித்தனத்தை எப்படி மாற்றுவது?
இருபதாம் திலகராலும் தொடக்கத்தில் நூற்றாண்டின் பின்னர் காந்தியாலும் வளர்க்கப்பட்ட இந்திய தேசியம் பார்ப்பன கலாச்சாரத்திற்குப் பாதுகாப்பாக அமைந்தது. காந்தியார் வர்ணாசிரம தர்மத்தில் தான் கொண்ட நம்பிக்கையை ஒழிவு மறைவில்லாமல் வெளியிட்டார். அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் அலை அலையாக இந்தியக் தேசியக் காங்கிரசுக்குள் புகுந்தனர். அந்தச் சமயத்தில், அனைத்துச் சாதியினருக்கும் சாதியினரின் மக்கள் விகிதாச்சாரப்படி } வகுப்புரிமை வேண்டும்; என்ற தீர்மானத்தினை காங்கிரசில் பெரியார் கொணர்ந்தார். இதற்கு ஆதரவாக திரு.வி.க., வ.உ.சி. ஆகியோர் இருந்தனர். ஆனால் பின்னர் அதே திரு.வி.க.வும் ஒரு காரணமாக ஈ.வெரா. பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார். ஆக மொத்தத்தில் சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயர் கலந்து கொண்ட முதல் காங்கிரஸ் மகா சபை தொடங்கி, தமிழ்நாடு காங்கிரசை மெல்ல மெல்லக் கைப்பற்றும் ஊர்ப்பனர்களின் மயற்சி 1924-ல் முழுமை