________________
தொ.பரமசிவன் 127 காலம் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. சலுகைக்குரிய முடிந்ததும் அது குறித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு (Referandum) நடத்த வேண்டும் என்ற அம்பேத்காரின் கோரிக்கையைச் சாப்ரு திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையில் அவசர அவசரமாகச் சிறைக்குச் சென்று தந்தையைச் சந்தித்து வந்த தேவதாஸ் காந்தி, பொதுவாக்கெடுப்பு விசயத்தில் விட்டுக் கொடுக்குமாறு தனிப்பட்ட முறையில் அம்பேத்காரிடம் கேட்டுக் கொண்டார். அன்று மாலை 4 மணிக்கு சிறையில் தலைவர்கள் காந்தியடிகளைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேரமோ இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் அம்பேத்கார் சிறையில் இருந்த காந்தியடிகள் தன்னுடைய பொது வாக்கெடுப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்ற உறுதியான நம்பிக்கையோடு சந்திக்க வந்தார். காந்தியடிகளும் அதை ஏற்றுக் கொண்டார். மறுநாள் (24.09.1932) சனிக்கிழமை பேச்சு வார்த்தை மீண்டும் தொடர்ந்தது. ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை 147 என்று முடிவு செய்யப்பட்டது. எத்தனை ஆண்டுகாலம் கழித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்ய அன்று நண்பகல் மீண்டும் காந்தியடிகளைச் சந்திக்க அம்பேத்கார் சிறைக்கு வந்தார். அவரோடு டாக்டர் சோலாங்கியும் இராஜாஜியும் வந்தனர். குறைந்தது 10 ஆண்டுகள் என்ற தன் கருத்தைக் காந்தியடிகள் ஒத்துக்கொள்வார் என்று அம்பேத்கார் எண்ணினார். காந்தியடிகள் 5 ஆண்டுகள் என்ற தன்னுடைய கருத்தில் உறுதியாக நின்றார். உறுதியான குரலில் அவர் அம்பேத்காரிடம் கூறினார். எது வேண்டும்? 5 ஆண்டுகள் அல்லது என்னுடைய உயிர். அம்பேத்கார் 5 ஆண்டுகள் என்கிற கால அளவிற்கு இணங்கினார். அன்று பிற்பகல் 3 மணிக்கு இராஜாஜி ஒப்பந்த நகலை காந்தியடிகளிடம் கொண்டு வந்து காட்டினார். உடனடியாக தேஜ்பகதூர் சாப்ரு, டாக்டர் அம்பேத்கார், எம்.சி.ராஜா. மதன்மோகன்மாளவியா ஆகியோர் ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியைப் பிரிட்டிஷ் பிரதமருக்குத் தந்தி மூலம் அனுப்பினர். பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட தகவலை (26.09.1932) திங்கள் பிற்பகல் 4.15 மணிக்கு சிறைத்துறைத் தலைவர் கர்னல் டயல் (Dyole) காந்தியடிகளிடம் தெரிவித்தார். அதற்குரிய ஆவணத்தையும் கொடுத்தார். மாலை 5.15 மணிக்குக் காந்தியடிகள் தன் மனைவி கொடுத்த ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பருகி உண்ணாவிரதத்தை முடித்தார். அப்போது சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய், சரோஜினி நாயுடு, கவிஞர் தாகூர், அம்பாலா