________________
இணையில்லாதவன்' என்றும் புகழ்பாடித் துதித்து வணங்குவார்கள் இதைத்தான் 'ஹீனோதீயிசம்' என்றார் ஆ ஆரியப்பண்பாட்டின் மாக்ஸ்முல்ல ஒரு குணாம்சம் என்று இதனை கொள்வோமெனில் இதன் சாராம்சம் 'சந்தர்ப்பவாதம்' என்கிறார். ஹிரியண்ணா என்ற ஆய்வாளர், இந்திய வரலாற்றின் எல்லா காலகட்டங்களுக்கும் இது பொருந்தும். சமரசட கீதையில் வைதீகம் சாங்கியத்தோடு செய்துகொண்டது. பௌத்தத்தின் சில துவக்கங்களை அதீதப்படுத்த சங்கரர் அத்வைதத்தை உருவாக்கினார். சமஸ்கிருதம் போல் வெறும் வடிவமாகப் போய்விட்ட நிர்க்குணபிரம்மத்திற்கு உயிரும் வாழ்வும் சதையும் தேடி பூமிக்கு இறங்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் பக்தித் தத்துவத்திற்கு ஏற்பட்டது. மலட்டு பிரம்மத்திற்கு என்ற மமதை தவிர வேறு எதையும் விளக்கும் ஆற்றல் இல்லாமல் போயிற்று எனவே பெண் தெய்வங்களுக்குத் தாராளமாக இடம் தந்தன பக்திப்புராணங்கள். ஆண் - பெண் சேர்க்கை குறித்த தந்தைவழி மாதிரிகளைப் பயன்படுத்தி உலகை விளக்கியது பக்திப்புராணம். கிருஷ்ண புராணங்களில் தாய்த்தெய்வமூலம் கொண்ட தாந்திரிகத் தாக்கம் ஏராளமாக உண்டு. அவ்வளவு நுட்பமாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணனின் உடல் ஆணுடலா என்பதே சந்தேகம். நெருக்கடிகள் ஏற்படும்போது மோகினி வடிவமெடுத்து எதிரிகளைக் கையாளுவது கிருஷ்ணனின் வழக்கம். சிறையில் பிறந்த கிருஷ்ணன் கடத்தப்பட்டபிறகு அவனுக்கு மாற்றாகப் படுக்க வைக்கப்பட்டிருந்த பெண்குழந்தை காளி காளி என்று புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணனின் மாற்றுவடிவம் (Substitute) காளி என்ற செய்தி இங்குக்கிடைக்கிறது. காமன் வழிபாடு வைணவ மரபில் கிருஷ்ண வழிபாட்டுடன் இணைந்துவிட்டது கவனிக்கத்தக்கது. vi