உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'பாற்கடலில் ஆதிசேடனில் பள்ளிகொண்ட பிரான்' என்ற படிமம், தாயின் வயிற்றுக்குள் கொடியுடன் மிதக்கும் கரு', என்ற தாந்திரிகவழி விளக்கம் கொண்டது. வைணவத்தின் படைப்பு விளக்கமான 'லீலை' 'லீலை' என்ற கருத்தாக்கம், மிக முக்கியமாக ஆண் - பெண் கலவியைக் குறிப்பது. இந்தக் கதைகளுக்கெல்லாம் வைதீக மரபில் மூலாதாரங்கள் கிடையாது. மிக GUGHT LOIT 661, செழுமையான, பன்மியப்பண்பு கொண்ட நாட்டார் மரபின் கதைகள் இவை. பக்தி இந்நூலில் டாக்டர் தொ.பரமசிவன் அவர்கள் இயக்கத்திற்கு ஜனநாயகத்தன்மை உண்டு என்ற பழைய கருத்தையும் தாண்டி, அதனை நாட்டார் பண்பாட்டு அடி டிப்படை நோக்கி நகர்த்தியிருக்கிறார். இது இந்த நூலின் சாதனை. நாட்டார் வழக்காற்றுத் தகவல்களின் தளத்தில் நின்று சமய வரலாற்றை நோக்குவது என்ற அணுகுமுறை இது. கள ஆய்வுகள் முக்கியமான தகவல்களைத் தருகின்றன. அழகர் திருவிழா கள ஆய்வுகள், தாலாட்டுப் பாடல்கள், 1939-ல் நடந்த மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம் குறித்த அதே காலத்திய சிறு பாட்டுப் புத்தகங்கள், காரைக்கால் பட்டினஞ்சேரி மீனவர்கள் விழா குறித்த கள ஆய்வுத் இவையெல்லாம் முதன்மைச் சான்றாதாரங்கள் ஆன்றவிந்த பண்டிதர் உள்ளொளியில் பிறப்பதே மூலஞானம் என்றிருந்த காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. சேரிச் சனங்களின் வாய்வழிக்கதைகளும் ஆட்டபாட்டமும் முதன்மைத் தரவுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. சுமித் சர்க்காரின் ‘கீழிருந்து வரலாறு எழுதப்படுவது. ரணஜித் குகா வகையறாக் களின் 'அடித்தள மக்கள் வரலாறு' என்ற வரிசையிலான ஆய்வு இது. தமிழில் பேராசிரியர் நா.வானமாமலை ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோர் இவ்வகை ஆய்வில் முன்னோடிகள் ஆவர், தகவல்கள் ஆகின்றன. vii