உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலவுவர், என்ற வியாபார நடவடிக்கை அன்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் நூல் மூட்டைகள், நேராக நூல் கடைக்கு வரும், செய்பவர்கள், நேராகச் சென்று வாங்குவர், என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படிச் சரோஜா ஆறணா, பங்கஜம் பத்தணா என்று கூறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. அன்று, மேலும் பலரை, இவ்விஷயமாக விசாரித்தேன்.

"ஏனப்பா, கேட்கிறாய்! அனியாயமாகத்தான் விலை ஏறுகிறது. ஒன்றுக்கு ஒன்பது, பத்து, இருபது, என்று விலை ஏறி விட்டது. இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து, பலர், இலாபமடிக்கின்றனர். இன்றைக்கு 200பேல் "ஆர்டர்" கொடுப்பார்கள், முப்பது ரூபாய் விலைக்கு; அந்த ஆர்டர் கொடுப்பவர், நெசவுத் தொழில் செய்பவருமல்ல. அவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது, வியாபார சூட்சமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே, 40 என்று விலை ஏறிவிடும், அவர் இலாபச் சாட்டு ஏறும்! இறங்குவதுமுண்டு, அதிலே சிலருக்கு இடர் வருவதுண்டு. ஆனால் இப்போது, விலை ஏறிக்கொண்டே போவதால், துணிந்து வாங்கி, விலை ஏதோ இறங்குவதுபோல இருந்தாலும், கஷ்டம் வருமோ என்று பயப்படாமல் சரக்குகளைக் கட்டிவைத்து விட்டால், பிறகு, தரகர்கள் வீதியிலே கூவுவர், சரோஜா, 44—6—0 பங்கஜா 44—10—0, என்று நூல் மூட்டைகளை வாங்கினவர், மகிழ்வார். புள்ளி போட்டுப் பார்ப்பார். இந்த அயிட்டத்திலே ஐந்தாயிரம்! என்று கணக்கெடுப்பார்!

துணி விற்கும் கடைகளிலே,

“நேற்று இதே பீஸ், 3—12—0-க்குக் கொடுத்தீரே"

20