உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இது நூல் மார்க்கட் தம்பி! நீ இதற்கு முன்பு இதைக் கவனித்ததில்லை என்று தெரிகிறது. இங்கு பல ஊர் மில்களின் நூல் பேல்கள் விற்பனை செய்யப்படும். நாங்கள் தரகுக்காரர்கள்; விலை கூறுவோம், விற்பனைக்கு ஏற்பாடு செய்வோம். உன்னைப் பார்த்தபோதுதான், கோவை சரோஜா மில் நூல் கட்டு ரூ. 44—6—0 என்று தந்தி வந்தது. நேற்று ரூ. 44-க்கு விற்பனை நடந்தது. ஆறணா என்றது, ஆறணா விலை ஏறிவிட்டது என்பது பொருள். இதைக் கூறிக்கொண்டிருந்தேன். பங்கஜா மில் சரக்கு, ரூ.44—10—0 என்றும் விலை கூறினேன். இந்தத் தரகு வியாபாரத்திலே, ஆயிரக்கணக்கிலே பலர் சம்பாதிக்கின்றனர்; எனக்கு ரூபாய்க்குக் காலணா கமிஷனே கிடைக்கும் என்றும் சொன்னேன். இவ்வளவும், ஓர் பெண் விஷயம் என்று எண்ணிக்கொண்டாய். என் விதி! உன்னிடம் அடியும் பட்டேன்" என்று விளக்கினான்.

"ஐயா! என்னை மன்னிக்கவேண்டும், நூல் விற்பனை என்றால், கடையிலே நடக்குமே தவிர, நடுவீதியிலே நடைபெறுமென்று எனக்குத் தெரியாது. அதிலும், சரக்கு மூட்டையைக் காட்டி, வியாபாரம் நடத்தியிருந்தால் நான் தெரிந்துகொண்டிருப்பேன். நீர், கையிலே ஒன்றுமே வைத்துக் கொண்டிருக்கவில்லை. சரோஜா ஆறணா என்றதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. யாரோ ஓர் பெண்ணைத்தான் விற்கிறீர், அதற்காகவே ஆள் பிடிக்கிறீர் என்று எண்ணி இந்த அடாத செயல் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறினேன். கூட்டம் கலைந்தது. நான் வாட்டத்துடன் இரயிலடி வந்தேன்.

சரோஜா மில் நூல் 44—6—0 விலைக்கு விற்கிறது. அதற்குப் பரபரப்பு. அதற்காகத் தரகர்கள் வீதிகளில்

19