உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயக்கம் சார்ந்த இதழ்களோடு வணிக நோக்குடைய இதழ்களும் கூட இந்நூற் கட்டுரைகளில் சிலவற்றை எடுத்து வெளியிட்டன. அதைவிடப் புதுமை வீட்டோடும். காட்டிய சமையலறையோடும் முடங்கிவிட்ட பெண்கள் மகிழ்ச்சியாகும். இந்த வகையான எதிர்வினைகள் என்னை மேலும் சிந்திக்கத் தூண்டின. ஏனென்றால் அந்த நூலின் சிறு கட்டுரைகளை எழுத 'கறுப்பு: ஒரு தமிழ்ப் பார்வை' தவிர நான் கடுமையான முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. அந்த நூலில் தரப்பட்ட செய்திகளும் பெரும்பாலான வாசகர்கள் அறிந்தவையே. இருந்தபோதும் வியப்பும் மகிழ்ச்சியுமான இந்த எதிர்வினைகளுக்குக் காரணம் என்ன? ஆர அமர சிந்தித்துப் பார்க்கையில் எனக்குச்சில காரணங் கள் தென்படுகின்றன. இழந்துவிட்ட கைப்பொருள் ஒன்றைத் திரும்பக் கண்டுபிடித்த மகிழ்ச்சியாகப் பெண்களின் மகிழ்ச்சி காணப்பட்டது. சமையலறை நவீனங்களைக்கூட அவர்கள் அரைமனத்தோடுதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சாதி உணர்வும் பழமைப் பற்றும் ஆண்களைவிடப் பெண்களிடம் சற்றுத் தூக்கலாகவே அமைந்திருக்கிறது. இதற்கான காரணங்களைத் தனித்தும், விரிவாகவும் நாம் பேச வேண்டும். இயக்கச் சார்பும் சிற்றிதழ் வாசிப்பும் உடைய நண்பர்களின் மகிழ்ச்சிக்கான காரணம் வேறு. அவர்களின் அறிவுலகத்திலிருந்து அவர்களின் குடும்பமும், தெருவும், ஊரும் பெருமளவுக்கு அன்னியப்பட்டுள்ளன. தாம் பிறந்த மண்ணையும் தம்முடன் பிறந்த மக்களின் மரபுகளையும் வாசிக்க அவர்களின் புத்தக வாசிப்புக்கு நடுவில் நேரம் கிடைக்காமல் போய்விட்டது.அதன் விளைவாகக் கடந்த நாற்பது ஆண்டுகளில் உருவான தமிழ்நாட்டு அறிவுலகம் அந்தரத்தில் தொங்குகிறது, சங்கர வேதாந்தம் போல. இந்தச் சிறிய நூல் அவர்களை மண்ணுக்கு இறக்கிவிட முயன்றிருக்கிறது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும், பயிர்வகைகளும் இவற்றின் ஊடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற தன்னுணர்ச்சி அவர்க ளிடம் பல காலம் விடைபெற்றுப் போய்விட்டது. இந்த நூலின் சிறு கட்டுரைகள் தம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திர கதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு அவர்களைக் காண வைத்திருக்கிறது. அதற்குமேல் இந்நூலின் வெற்றிக்கு வேறு எந்தக் காரணத்தையும் சொல்லிவிட முடியாது. தன்னுணர்ச்சியற்ற சமூகப் பார்வை என்பதற்கு என்னால் மற்றொரு சான்றையும் கூறமுடியும். இந்தப் பதிப்பில் 10