விலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம்
26