உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."

"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”

"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"

திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.

"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே

29