சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
34