உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் 6

பிரதீகாரி : பெருமான் கட்டளையிடும் வண்ணமே, (போகின்றாள்.)

அரசன் : ஏடி! இங்கே வா.

பிரதீகாரி : இதோ வந்தேன்.

அரசன் : ஒருவருக்குப் பிள்ளையுண்ட ா

ல்லையா

என்றுதான் ஆய்வானேன்? குடிமக்கள் தம் அன்புள்ள எவரை இழந்தாலும்,

உறவினரில்

பழியில்லாவழித்,

துஷியந்தன் அவரவர்க்கு அவ்வவ்வாறே உறவினராயிருப்பா

னென்று முரசறையச் சொல்.

பிரதீகாரி : அப்படியே முரசறையச் சொல்லுகிறேன்.

(போய்த் திரும்பிவந்து)

உரியகாலத்திற் பெய்த மழைபோல், தங்கள் அறிவிப்பு மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசன் : (மிகவும் வெய்துயிர்ப்பெறிந்து) ஐயகோ! முதல்வன் இறந்ததும் பிள்ளை யின்மையினாலே சார்பு இல்லாததான குடும்பங்களின் பொருளானது ஏதிலான் ஒருவன்பாற் போய்ச் சேர்கின்றது. எனது முடிவு காலத்திலும் புருவமிசத்தின் செல்வநிலையும் இங்ஙனந்தான் ஆகப் போகின்றது!

பிரதீகாரி : தீமை விலகக் கடவது!

அரசன் : தானேவந்த சீரை இழித்துவிட்ட என் மேல் வசையுண்டாகுக!

சானுமதி : ஐயமின்றி இவர் என் தோழியை நினைந்தே தம்மை நொந்து கொள்ளுகின்றார்.

அரசன் : ஏனெனில், தக்க காலத்தில் விதைக்கப் பட்டுப் பெருவிளைச்சலைத் தருவதா யிருக்கின்ற நிலத்தைக் கைவிடுதல் போல, அவளிடத்து எனது ஒளி நாட்டப் பட்டிருந்தும் என் குடும்பத்திற்கு என்றும் நிலைபேறாயுள்ள என் அறக்கிழத்தியை நான் விலக்கி விட்டேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/151&oldid=1577357" இலிருந்து மீள்விக்கப்பட்டது