சாகுந்தல நாடகம்
89
நல்லொழுக்கமுடையளாயினும், தன் உறவினர் குடும்பத் திலேயே இருப்பளாயின் அவள்மேல் வேறு வகையாய் உலகத்தார் ஐயுறுகின்றார்கள் ஆதலாற்றான் பெண்ணைச் சேர்ந்தவர்கள் தம்முடைய ய பண் தன் வெறுக்கப்படினும், அவனுடனேயே அவளிருக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.
கணவனால்
அரசன் : என்ன, இம் மாதரார் என்னால் முன் மணம் புரியப் பட்டவரா?
நீ
சகுந்தலை : (தனக்குள் பெருந்திகிலோடு) ஓ நெஞ்சமே நீ அஞ்சியது அப்படியேயாயிற்று
சார்ங்கரவன் : தான் செய்த ஒரு செய்கையிலுள்ள வறுப்பால் தன் கடமையினின்றும் வழுவுதல் அரசனுக்குத் தகுதியாமா?
அரசன் : பொய்யாகக் கற்பித்துக்கொண்ட இக் கேள்வி எதற்காக?
சார்ங்கரவன் : செல்வத்தாற் செருக்குற்று மயங்கினவர் களுக்கு இவைபோன்ற தீய இயல்புகள் பொதுவாய் உண்டாகின்றன.
அரசன் : யான் மிகவும் இழித்துப் பேசப்பட்டேன்.
கௌதமி : குழந்தாய்! சிறிது நேரம் வெட்கப் படாமலிரு, உன் முக்காட்டை எடுத்து விடுகின்றேன் அதன்பின் உன் கணவர் உன்னைத் தெரிந்துகொள்வர். (சொல்லியபடியே செய்கிறார்.)
அரசன் : (சகுந்தலையைப் பார்த்துத் தனக்குள்)
வடுவறு பேரெழில் வயங்கவிவ் வயின்வருங் கொடிபுரை யுருவினாள் தன்னைக் கூடிநான் கடிமணம் அயர்ந்ததாக் கருத லாமையால் விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை