உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 6

துறவிகள் : மந்திர ஆற்றலுடைய முனிவரர் நலத்தைத் தம் வயத்திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர் உமது நலத்தை முதலிற் கேட்கச்சொல்லி, அதன்பின் இதனைத் தெரிவிக்கும் படி சொன்னார்.

அரசன் : முனிவரர் கட்டளை யாது?

சார்ங்கரவன் : நீங்கள் இருவீரும் ஒருவரோடொருவர் சைந்தமையின், என்மகளை நீர் மணம் புரிந்து கொண்ட தனை நான் உங்கள் மேல் வைத்த அன்பினால் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். நீரோ நன்கு மதிக்கப் படுதற்குரியார்; எல்லாருள்ளும் மிகச் சிறந்தவராக எம்மால் அறியப்பட்டிருக் கின்றீர்; சகுந்தலையோ நல்லொழுக்கமே ஓர் உருவெடுத்து வந்தது போல் விளங்குகின்றாள்; நான்முகக் கடவுளோ ஒத்தநலங்கள் வாய்ந்த மணமகனையும் மணமகளையும் ஒன்று கூட்டி அவ்வாற்றால் நெடுங்காலந் தனக்கிருந்த பழிச் சொல்லையும் நீக்கிக் கொண்டான். ஆகையால், இல்லற வாழ்க்கையை ஒருங்குசேர்ந்து நடப்பித்தற்குரிய துணையாகக் கருவுற்றிருக்கும் இவளை இப்போது ஏற்றுக்கொள்வீராக.

L

கௌதமி : மேதகவுடையீர்! நான் சில சொல்ல விரும்பு கின்றேன்; எனக்கு இதிற் பேச இடமில்லை; ஏனென்றால், நீரும் இவளும் முதியோரைக் கேட்டாவது உறவினரைக் கலந்தாவது தனைச் செய்தீர்களில்லை. உங்களிருவர்க்குள்ளேயே நடந்துபோன இதன்றிறத்து நீங்கள் ஒருவர்க்கொருவர் நடந்து காள்ளவேண்டிய முறையைப் பற்றி சொல்லக்கூடும்?

நான்

யாது

சகுந்தலை : (தனக்குள்) எம் பெருமான் இப்போதுயாது சொல்வரோ தெரியவில்லையே?

அரசன் : என் முன் வந்த ஈது என்னை!

சகுந்தலை : (தனக்குள்) இச்சொற்கள் நெருப்பாயிருக் கின்றனவே!

சார்ங்கரவன் : ஈதென்ன இதுவா? நீர் தாம் உலகியல் முற்றும் அறிந்தவராயிற்றே! மணமான பெண் ஒருத்தி மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/119&oldid=1577178" இலிருந்து மீள்விக்கப்பட்டது