உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

வாயில்காவலன்

ஐயனே! என்

87

எண்ணமானது

இப்புதுமையினை ஆராய்ந்து பார்த்துங் குறியின்னதென்று வள் உருவமோ மிகவும்

பிடிபடவில்லை. ஆனாலும்

அழகாகத்தான் இருக்கின்றது.

அரசன் : அப்படித்தான் இருக்கட்டும்: பிறன் மனைவியை உற்று நோக்குதல் ஆகாது.

சகுந்தலை : (மார்பின்மேற் கையை வைத்துத் தனக்குள்) நெஞ்சமே! ஏன் இங்ஙனம் நடுங்குன்றாய்? என் தலைவனது காதல் மிகுதியை நினைவுகூர்ந்து பொறுமை யாயிரு.

புரோகிதர் : (முன்னே போய்) ஐயனே! முறைப்படி ஏற்று வணங்கப்பட்ட துறவிகள் இதோ வந்திருக்கின்றனர். பிறன் மனை நோக்காத பேராண்மை அறனன்றோ ஆன்ற ஒழுக்கு.

இவர்கள் தங்கள் குருவினிடமிருந்து ஏதோ செய்தி காண்டு வந்திருக்கின்றார்கள். தாங்கள் அன்புகூர்ந்து அதனைக் கேட்டல் வேண்டும்.

அரசன் : அப்படியே கேட்க உன்னிப்பாயிருக்கின்றேன். துறவிகள் : (கையை உயரத்தூக்கி) ஓ அரசனே! உமக்கு வெற்றியுண்டாவதாக!

அரசன்: உங்கள் எல்லார்க்கும் வணக்கஞ் செய்கின்றேன். துறவிகள் : நீர் கோரிய பொருளைப் பெறுவீராக!

அரசன்

முனிவருடை ய

டையூறின்றி நடைபெறுகின்றனவா?

தவவொழுக்கங்கள்

துறவிகள் : நல்லோரைப் பாதுகாப்பதற்கு நீர் இருக்கும் போது, தவவொழுக்கங்களுக்கு இடையூறு எவ்வாறுண்டாகும்? ஞாயிறு சுடர்விரிந்து விளங்குகையில் இருள் எவ்வாறு தோன்றும்?

அரசன் : இப்போதுதான், ‘அரசன்' என்னும் என் பட்டப் பெயர் பொருளுடை மொழியாயிற்று. உலகினை நலப்படுத்து தற்கு மாட்சிமை தங்கிய காசியபர் நன்றாயிருக்கின்றனரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/118&oldid=1577177" இலிருந்து மீள்விக்கப்பட்டது