குழந்தைச் செல்வம்/ஆதிப் பொது மறை
Appearance
42. ஆதிப் பொதுமறை
பல்லவி
ஆதிப் பொது மறையை - அனுதினம்
ஓதிப் பழகுவமே.
அனுபல்லவி
ஜாதி மதபேதம் ஏதுமிலா நடு
நீதியை எங்கும் நிலைநிறுத்தவந்த
(ஆதிப்)
சரணம்
தெய்வப் பெரும் புலவன் - தமிழ்நிலம்
செய்தவத் தால்பிறந்தோன்;
ஐயந்திரிபற உண்மை அறிந்தவன்
வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய
(ஆதிப்)
பள்ளிச் சிறுவரொடு - சிறுமியர்
பண்டிதர் பாமரரும்
உள்ளக் களிப்புடன்
ஒன்றாகக் கூடியே
தெள்ளத் தெளிந்த
குரலில் தெருவெல்லாம்
(ஆதிப்)