உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/ஆதிப் பொது மறை

விக்கிமூலம் இலிருந்து

42. ஆதிப் பொதுமறை

                    பல்லவி

ஆதிப் பொது மறையை - அனுதினம்
ஓதிப் பழகுவமே.


                  அனுபல்லவி

ஜாதி மதபேதம் ஏதுமிலா நடு
நீதியை எங்கும் நிலைநிறுத்தவந்த (ஆதிப்)


                   சரணம்

தெய்வப் பெரும் புலவன் - தமிழ்நிலம்
     செய்தவத் தால்பிறந்தோன்;
ஐயந்திரிபற உண்மை அறிந்தவன்
     வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய (ஆதிப்)


பள்ளிச் சிறுவரொடு - சிறுமியர்
     பண்டிதர் பாமரரும்
உள்ளக் களிப்புடன்
     ஒன்றாகக் கூடியே
தெள்ளத் தெளிந்த
     குரலில் தெருவெல்லாம் (ஆதிப்)