வை.மு.கோ.103-வது நாவல்
42
யல்லவா? உன்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது எத்தனை உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன?”… என்று தனக்குள் எண்ணியபடி காரில் ஏறினான். பின் ஸீட்டில் துளஸிபாயும், வெகு வணக்கமாய் மரியாதையாய் உட்கார்ந்தாள்… "டாக்டர்! இந்த பேஷண்டிடம் நான் வெகுவாய்ப் பயந்து விட்டேன். நம்பிக்கை இழந்து போய், நடுங்கும் சமயம் பகவான் உங்களைக் காட்டி, என் கவலையைத் தீர்த்து வைத்தார்; உங்களுக்கு எப்படி நான் வந்தனம் செய்வது என்றே தெரியவில்லை… கடவுள் உங்களுக்குச் சகல மங்களங்களையும் கொடுத்து ரக்ஷிக்க வேண்டுகிறேன்” என்றாள்.
இதைக் கேட்ட ஸ்ரீதரன் சிரித்துக்கொண்டே, “அம்மணீ! இதெல்லாம் என்ன வழக்கம்? எனக்கு இந்த முகஸ்துதியோ, வீண் ஜம்பமோ பிடிக்கிறதே இல்லை. மனிதர்களுக்கு மனிதர் உதவி செய்வது ஒரு கடமையில் சேர்ந்திருக்கையில், இதற்குத் தோத்திரம் எதற்கு?…”
துளஸி:-டாக்டர் ! இம்மாதிரி சொல்கிறவர்கள், நூற்றுக்கு ஒருவர் கூட கிடைப்பதில்லை! முற்றுந் துறந்த முனிவராக இருந்தால் கூட, வெளி ஜம்பத்தில் நாட்டமும், முகஸ்துதியில் அடங்காத ஆசையும், தங்கள் புகைப்படங்களைப் பல பத்ரிகைகளிலும், புத்தகங்களிலும், துண்டு விளம்பரங்களிலும் ப்ரசுரிக்கும் மகத்தான விருப்பமும், விடாமல் இருந்து வருவதை நாம் ப்ரத்யட்சமாய்ப் பார்க்கவில்லையா? பாரபட்சமாய்ச் சிலரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதும், சிலரைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பமும், கடமையும் இருப்பினும், அதை வேண்டுமென்று விட்டு விடுவதும் பெருமையாகக் கொள்கிறார்கள்! இவைகளைப் போல், உலகத்தில் பதினாயிரக் கணக்கில் நாம் பார்க்கிறோம்…
ஸ்ரீதர:- அம்மணீ! உலகம் ஒரு பெரிய போதனை சாலையல்லவா? அதனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அனந்தம் இருக்கின்றன. அவைகளைப்