59 சாந்தியின் சிகரம்
திருந்தது கண்டு, அந்த வ்யாதியின் கூறை அறியவும், எப்படி எப்படி எல்லாம் வைத்யம் செய்யலாம் என்றும், நான் அந்த அனாதையை ஒரு பரீக்ஷார்த்தமாக வெகு அக்கறையுடன்தான் கவனித்து வருகிறேன். அந்த விஷயத்தில் நான் தேர்ச்சியும் பெற்று வருகிறேன். நான் கையாளும் புதிய முறைகளையும், தைரியமான வேலைகளையும் கண்டு, மற்ற டாக்டர்கள் ப்ரமித்து என்னைப் பாராட்டுகிறார்கள்.
கமல:-அப்படிப்பட்ட விசித்ரமான வ்யாதி என்னதப்பா!
ஸ்ரீ தா- மூளையிலேயே கோளாறு உண்டாகியிருந்தது. இந்த அனாதை இருந்தாலும் கேட்பாரில்லை. போனாலும் கேட்பாரில்லை, ஆகையால், மூளையையே எடுத்துச் சரிப்படுத்தும் மேல்நாட்டு முறைப்படி அனுட்டிக்கலாம் என்று ஒரு தைரியம் பிறந்து, செய்து, வெற்றியும் பெற்று வருகிறேன். பிழைக்க மாட்டாள் என்றிருந்த பெண் பிழைத்து விட்டாள். மூளையும் சரியாகி விட்டது. அவளைக் கொண்டு நான் ஒரு பரீக்ஷை பாஸ் செய்ததால், அவளுக்கு என்னுடைய சொந்த செலவில் சகல சவுகரியமும் ஆஸ்பத்ரியில் செய்து வருகிறேன். நன்றாகத் தேர்ச்சி பெறுவதற்கு, இன்னும் சில மாதங்களாகும், அதன் பிறகு, அவளிஷ்டம். இந்த உள் விவரமறியாத எந்த ப்ரகஸ்பதிகள் உன்னிடம் கலகம் செய்தார்களோ! எது வேண்டுமாயினும், செய்யட்டுமே, எனக்கதைப் பற்றிக் கவலை இல்லை. நீயும் வீணான புரளிகளை நம்பாதே.
கமல:- என்ன விசித்திரமான விஷயமப்பா! நான் மனக்கோட்டை கட்டியது வீணானதா!… அப்படியானால்… அந்த பெண்ணை நான் உன்னோடு வந்து பார்க்கட்டுமா…
ஸ்ரீதர:- அம்மா! இதென்ன அசட்டுத்தனம்! தற்சமயம் நம் தலை மீது பாரமாயிருக்கும் தம்பியின் விஷ-