உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு.கோ. 103-வது நாவல்

112

நிமிஷந்தான் இந்தியாவுக்கு வந்தவர்களாகையால், மற்றபடி எதுவும் தெரியாது. என்னை தாராளமாகச் சோதனை போடலாம். கடிதம் எழுதியது உண்மை; அது யாரிடம் மறைந்திருக்கிறதோ எனக்குத் தெரியாது,” என்று ஸ்டோன் திட்டமாகக் கூறி ஊர்ஜிதப் படுத்தினான். அவனுடன் வந்திருக்கும் வெள்ளையர்களும், அவனுடைய வாக்குமூலத்தையே ஊர்ஜிதப்படுத்திப் பேசினார்கள்.

இனி கேட்க வேண்டுமா! ஒரே சமயத்தில், இரண்டு கொலைகள் நடந்திருப்பது கண் முன்பு ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது. ஸ்ரீதரன் அனாதைகளின் போஷணைக்காக தர்ம வைத்தியசாலை நடத்துவதும், பணக்காரர்களிடம் நிறைய பணம் வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு வினியோகிப்பதும் ஊராரறிந்த விஷயம். வேணுமென்று, விவாகம் வேண்டாமென்று வேஷம் போடும் மனிதன் என்பதும் சிலருடைய அபிப்பிராயம். இதைப் பற்றி, சிலர் இளப்பமாய் பரிகாஸம் செய்வதும் உண்டு. கள்ளச் சாமியார்! வேஷதாரி, என்று ஏசுவதும் உண்டு.

இவன் தனது சாமர்த்தியத்தினால் வ்ருத்திக்கு வந்து விடுகிறானே என்கிற வயிற்றெரிச்சல் டாக்டர்களும் உண்டு. இங்குள்ள சகலமான சந்தர்ப்ப சாக்ஷிகளும், வெள்ளையர்களின் வாக்குமூலங்களின் அழுத்தமான வார்த்தைகளும் ஒன்று சேர்ந்து, போலீஸார் தமது வழக்கப்படியான ஜோடனையுடன் “டாக்டர் ஸ்ரீதரனையும், வக்கீலையும், துரைக் கண்ணனின் குமாஸ்தாவான குமரேசனையும் தாமோதரனையும் சேர்த்து நால்வரையும் நாங்கள் சந்தேகித்து, கைது செய்கிறோம்” என்று முடிவு கூறியதைக் கேட்டதும் ஸ்ரீதரன் நடுநடுங்கினான். ஒரே இருளாக ஆகாயமும், பூமியும் இருண்டு சுற்றுவது போல் தோன்றி வதைத்தது; “சத்யமே ஜயம்; பரோபகாரமே வாழ்க்கையில் லக்ஷ்யம்” என்கிற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தது.

அடுத்த க்ஷணமே ஏதோ ஆழ்ந்த யோசனை செய்து, தனக்குள் முடிவு கட்டிக் கொண்டு… “போலீஸார் அவர்களே!